தங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரிப்பு - வர்த்தகப்பற்றாக்குறை உயர்வு
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
டெல்லி: தங்கம் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 94.32 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் சமயத்தில் 76.66 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்துவருகிறது. இந்தியர்கள் தங்கத்தை புனிதமான பொருளாக மதிப்பதுடன், வருங்காலத்திற்கு ஏற்ற நல்ல முதலீடாகவும் மக்கள் கருதுகின்றனர். இதனால்தான், இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே தேவை அதிகமாக உள்ளது. அதுவும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும்.

இந்தியாவின் ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களுக்கான தங்கம் இறக்குமதி குறித்த விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் 17.63 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது 2017-18 நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 16.96 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை விட 4 சதவிகிதம் கூடுதலாகும்.
தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளதால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 94.32 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் சமயத்தில் 76.66 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
இந்த ஆண்டின் ஜூன் மாதம் வரையில் தங்கம் இறக்குமதி மிக மந்தமாகவே இருந்தது. அதன் பின்னர் இறக்குமதி இரட்டை இலக்க வளர்ச்சியைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 51.5 சதவிகித உயர்வுடன் மொத்தம் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்திருந்தது.
உலகின் மிகப் பெரிய தங்கம் இறக்குமதியாளராக உள்ள இந்தியா, நகை உற்பத்தித் துறைக்காகவே பெரும்பாலான தங்கத்தைப் பயன்படுத்துகிறது. ஆண்டுக்கு 800 முதல் 900 டன் வரையிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வரும் சூழலில் தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தரப்பிலிருந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனினும் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தற்போது அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 73.50 ரூபாயை எட்டியுள்ளது. கச்சா எண்ணெயும் நாளுக்கு நாள் தற்போது உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய்க்குப் பிறகு இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது தங்கம். வீடுகளில் தங்கத்தை சேர்த்துவைப்பதில் உலக அளவில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
2012- 2013 காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 8,800 கோடி டாலராக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதுழ 68.85 ஆக சரிந்தது. எனவே தங்கம் அதிக அளவு இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய அரசு 20:80 என்ற தங்க இறக்குமதி திட்டத்தைக் கொண்டுவந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications