சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது

Subscribe to Oneindia Tamil

சென்னை : தங்கம் விலை சவரன் ரூ.20 ஆயிரத்து 96க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், தங்கத்தின் விலை சென்னையில் மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வாரம் மளமளவென குறைந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.19 ஆயிரத்தைவிடவும் குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Gold prices rise in Chennai

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட், ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு ரூ. 49 அதிகரித்து, ரூ. 2,512 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 20,096 என்ற அளவிலும் உள்ளது.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 53 உயர்ந்து ரூ. 2739 என்ற அளவில் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 1.60 அதிகரித்து ரூ. 40.80 என்ற அளவிலும், பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 1510 உயர்ந்து ரூ. 38,170 என்ற அளவில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+