"50% குறைப்பு.." ஒரே வாரத்தில் தங்கம் விலையில் வர போகும் மிகப்பெரிய மாற்றம்.. ஆஹா மெகா இன்ப செய்தி!
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே அடுத்த ஒரு வாரத்தில் இரு முக்கிய சம்பவங்கள் நடக்கவுள்ளது. அந்த இரு சம்பவங்களைப் பொறுத்து தங்கம் விலையில் மிகப் பெரிய மாற்றம் வரும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சர்வதேச நிச்சயமற்ற சூழலால் கடந்த ஆண்டு பங்குச்சந்தை பெரியளவில் லாபம் கொடுக்கவில்லை. இந்தாண்டும் கூட அதே நிலைமை தான் தொடர்கிறது. ஆனால், மறுபுறம் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் வேகமாக உச்சம் தொட்டு வருகிறது. 1979க்குப் பிறகு இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை
பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதோடு சேர்த்து அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகள் மற்றும் பலவீனமான டாலர் போன்ற காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தங்கம் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பு ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.
இந்தியர்களுக்குத் தங்கம் மீதான மோகம் உலகறிந்ததே. பெரும்பாலான வீடுகளில் தங்கம் மட்டுமே ஒரே சேமிப்பாகக் கூட இருக்கிறது. மோர்கன் ஸ்டான்லி மதிப்பீட்டின்படி, $3.8 டிரில்லியன் மதிப்புள்ள 34,600 டன் தங்கம் இந்தியக் குடும்பங்களிடம் உள்ளது. இது அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளின் மொத்த இருப்புகளைவிட அதிகமாகும்.
மத்திய பட்ஜெட்
இதற்கிடையே வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், தங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளது. கடந்த 2024 ஜூலையில் மத்திய அரசு தங்கத்தின் சுங்க வரியை 15%லிருந்து 6%ஆகக் குறைத்தது. உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வு நாடான இந்தியாவில் அப்போது தங்கக் கடத்தல் அதிகரித்த நிலையில், அதைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்குப் பலனும் கிடைத்தது. வரி குறைப்புக்குப் பிறகு தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருந்தது.
அதேநேரம் கடந்த சில வாரங்களில் தங்கக் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாம். சில வாரங்களில் மட்டும் பல கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்தியாவில் இறக்குமதி வரி 6% மற்றும் ஜிஎஸ்டி 3% என 10% வரி செலுத்த வேண்டி இருக்கிறது. இதனால் ஒரு கிலோ கடத்தினாலே ஏஜெண்டுகளுக்கு கணிசமான லாபம் தருவதால் இந்தக் கடத்தல் அதிகரித்துள்ளதாக மும்பையின் மூத்த தங்க வியாபாரி ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
50% வரை குறைப்பு?
கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சுங்க வரியை 50% குறைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது. அதாவது இப்போது 6%ஆக சுங்க வரி இருக்கும் நிலையில், அதை 3%ஆக குறைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி வரி குறைக்கப்பட்டால் தங்கம் விலையும் நிச்சயம் குறையும்.
2024 ஜூலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 9% குறைக்கப்பட்டபோது, உள்நாட்டுத் தங்க விலை 5% சரிந்தது. எனவே, இப்போது வரி குறைக்கப்பட்டாலும் விலை கணிசமாகக் குறையும். தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் சூழலில் வரி குறைப்பால் விலை ஓரளவுக்குக் குறைந்தாலும் கூட அது நுகர்வோருக்குப் பெரியளவில் பலன் கொடுக்கும். ஆனால், இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை ஓகே சொல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே, பட்ஜெட்டின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முக்கியமான மீட்டிங்
அதேபோல வரும் ஜனவரி 27, 28 தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடக்கிறது. 28ம் தேதி வட்டி குறைப்பு குறித்த முடிவை அமெரிக்க மத்திய வங்கி அறிவிக்கவுள்ளது. அதில் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை என்றாலும் கூட தங்கம் விலை கணிசமாகக் குறையவே செய்யும். எனவே, அடுத்த ஒரு வாரத்தில் நடக்கும் இந்த இரு சம்பவங்களும் தான் தங்கம் விலையைத் தீர்மானிக்கப் போகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications