ஜூன் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 95,610 கோடி - ஹஸ்முக் ஆதியா
ஜூன் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 95,610 கோடி ரூபாயாக உள்ளதாக மத்திய நிதித்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா கூறியுள்ளார்.
டெல்லி: ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ.95,610 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதித்துறை செயலர் தகவல் தெரிவித்தார்.
பல முனை வரிகளான வாட் வரி, கலால் வரி, சுங்க வரி, நுழைவு வரி (Entry Tax) பொழுது போக்கு வரி என பலதரப்பட்ட வரி முறைகளாக இருந்த வரி விவிதிப்பு முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக ஒரே தேசம் ஒரே வரி (One Nation One Tax) என்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பை அமல் செய்யும் இந்த திட்டத்திற்கு பலத்த ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. இந்த சட்டம் அமல்படுத்தபட்டது முதல், நாடு முழுவதும் இருந்த 12க்கும் அதிகமான வரி விதிப்பு சட்டங்கள் முடிவுக்கு வந்தன.
சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் வசூலான தொகை எவ்வளவு என்பதை வரித்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ.95,610 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதித்துறை செயலர் தகவல் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி கூட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பல பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் மத்திய நிதித்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா பேசினார். ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூலை 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வருமானத்தின் சராசரி 89,885 கோடி ரூபாயாக இருந்தது. போலி பில்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டால், வருமானம் அதிகரிக்கும். அதிகாரிகள், வணிகர்கள் ஆகியோரது உழைப்பே ஜிஎஸ்டி வெற்றி பெற காரணம் என ஹஸ்முக் ஆதியா கூறினார்.
நடப்பு 2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்திற்கு உதவும் இ-வே பில் என்னும் இணையவழி ரசீது பயன்பாடு அமல்படுத்தப்பட்டதாலும் ஏப்ரல் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1,03,458 கோடி ரூபாயை தொட்டு சாதனை படைத்தது. கடந்த நிதி ஆண்டில் சராசரியாக மாதத்துக்கு ரூ.90,000 கோடியாக வந்திருந்த நிலையில் மே மாத வசூல் ரூ.94,016 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications