HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி (HDFC) வங்கி, தனது கடன் வட்டி விகிதங்களை (MCLR) உயர்த்தியுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், அந்த வங்கியில் கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை (EMI) அதிகரிக்க வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் ஹெச்டிஎப்சி என்பது நாட்டின் மிகப்பெரிய வங்கி என்பதால், இவ்வங்கியின் செயல்பாடுகளை மற்ற வங்கிகளும் பாலோ செய்யும் என்பதால் மற்ற தனியார் வங்கிகளும் இதேபோல் வட்டி விகிதத்தை உயர்த்தலாம். அப்படி செய்தால் வங்கியில் கடன் வாங்கிய அனைவரின் ஈஎம்ஐ-யும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

HDFC Bank

வட்டி உயர்வு எவ்வளவு?

ஹெச்டிஎப்சி வங்கி தனது 'எம்சிஎல்ஆர்' (MCLR) எனப்படும் கடன் வட்டி விகிதத்தை 0.05% முதல் 0.10% வரை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 8, திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

குறுகிய கால கடன்கள்: ஒரே நாள் மற்றும் மூன்று மாத கால கடன்களுக்கான வட்டி 8.10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆறு மாத கால கடன்கள்: இதற்கான வட்டி 8.35% ஆக உயர்ந்துள்ளது.

இரண்டு ஆண்டு கால கடன்கள்: நீண்ட கால கடன்களுக்கான வட்டி 0.10% உயர்த்தப்பட்டு, தற்போது 8.55% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, கடன்களுக்கான வட்டி விகிதம் இப்போது 8.05% முதல் 8.65% வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கு இதன் பாதிப்பு என்ன?

வங்கி உயர்த்தியுள்ள இந்த 'MCLR' என்பது ஒரு வங்கி வழங்கக்கூடிய கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். வங்கிகள் இந்த விகிதத்தை உயர்த்தும்போது, அதனுடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் தானாகவே உயரும். இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் இஎம்ஐ (EMI) தொகை அதிகரிக்கும்.

கடந்த மாதம் தான் ஹெச்டிஎப்சி வங்கி தனது வட்டி விகிதங்களைச் சற்று குறைத்திருந்தது. ஆனால், ஒரே மாதத்தில் மீண்டும் வட்டியை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெபாசிட் வட்டி விகிதங்கள் (FD Rates):

ஒருபுறம் கடன் வட்டி உயர்ந்தாலும், மறுபுறம் நிரந்தர வைப்பு நிதி (FD) வைத்திருப்பவர்களுக்கு வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடர்கின்றன.

1 வருடம் முதல் 15 மாத கால டெபாசிட்டுகளுக்கு 6.25% வட்டி வழங்கப்படுகிறது. 18 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 6.45% வட்டி கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வட்டியுடன் கூடுதலாக 0.50% வரை வட்டி வழங்கப்படுகிறது.

நீங்கள் ஹெச்டிஎப்சி வங்கியில் கடன் வாங்கியிருந்தால் அல்லது புதிதாகக் கடன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இனி நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் வங்கியின் கடன் கணக்கை சரிபார்த்து, உங்கள் ஈஎம்ஐ தொகையில் மாற்றம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+