ஒரே க்ளிக்கில் ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் தகவல் உங்களுக்காக! ஆன்லைனில் அப்ளேவும் செய்யலாம்
சமூக பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வந்த பிறகு, இன்சூரன்ஸ் சேவை வழங்கும் துறை பெரிதாக விரிவடைந்துவிட்டது. ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு என்ற நிலையில் மட்டுமே இருந்த இந்த இன்சூரன்ஸ் சேவை, டிராவல் இன்சூரன்ஸ், பென்சன் திட்டம் என பல பக்கமும் விரிவடைந்துள்ளது.
உறவினர்கள், நண்பர்கள் என எத்தனை பேர் இருந்தாலும், அல்லது இல்லாவிட்டாலும், அவசர காலத்தில் கைகொடுப்பது இன்சூரன்ஸ் திட்டங்கள்தான். இதுபோன்ற ஒரு முக்கியமான துறை பற்றிய விவரத்தை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டியது வருங்கால சந்ததிகளின் அவசியம்.
இன்சூரன்ஸ் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் எவை, எவை?, அவற்றில் ப்ரீமியம் தொகை எவ்வளவு? அந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எத்தனை வகையான சேவைகளை தருகின்றன? என்பது போன்ற விவரங்களை ஒவ்வொரு வெப்சைட்டாக தேடிச் சென்று படித்துக்கொண்டிருக்கவோ அல்லது, போனில் விசாரிக்கவோ நம்மில் பலருக்கு நேரமும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.
ஏனெனில், ஒரே க்ளிக்கில், நாட்டிலுள்ள, பல்வேறு முக்கிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை எளிமையாக கொண்டு வந்து சேர்த்துள்ளோம். http://tamil.goodreturns.in/buy-insurance-online/ என்ற இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். அத்தனை வகை இன்சூரன்ஸ் பற்றியும், அந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும், அவற்றின் சேவை பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.
உதாரணத்துக்கு, ஹெல்த் இன்சூரன்ஸை எடுத்துக்கொண்டால், எவ்வளவு ரூபாய்க்கு, இன்சூரன்ஸ் வேண்டும், குடும்பத்தில் எத்தனை பேருக்கு வேண்டும் என்பதை குறிப்பிட்டுவிட்டு, பெயர் உள்ளிட்ட ஒரு சில அடிப்படை விவரங்களை மட்டும் கொடுத்தாலே போதும். ஒப்பிட்டு பார்க்க உங்களுக்கு ஓராயிரம் வாய்ப்புகள் திறந்துவிடப்படுகிறது.
வெறும் ஒப்பீடு மட்டுமில்லை, பிடித்த இன்சூரன்ஸ் திட்டங்களில் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி ஆன்லைனிலேயே நீங்கள் இணைய முடியும். இந்த வசதியால், உங்களுக்கு, நேரம், பண விரையம் ஏற்படாது. சந்தேகம் இருப்பின், தொலைபேசியில் இன்சூரன்ஸ் சேவை வழங்குநர்களே உங்களுக்கு வழி காட்டிவிடுவார்கள். கார், பைக் இன்சூரன்ஸ்களை ஆன்லைனிலேயே புதுப்பித்துக் கொள்ளவும் (renewal) வசதி செய்யப்பட்டுள்ளது. வாருங்கள், வருங்காலம் காத்திருக்கிறது.













Click it and Unblock the Notifications