Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலிடத்தில் பெங்களூர்.. சீனா கூட பின்னாடி தான்! இன்னொரு தென்னிந்திய நகரமும் இருக்கு! எதில் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகில் இப்போது படுவேகமாக நகர் மயமாக்கல் நடந்து வருகிறது. உலகில் பெரும்பாலான மக்கள் நகர்ப்புறங்களில் வாழத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உலகில் படுவேகமாக வளர்ந்து வரும் 10 நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தென்னிந்திய நகரங்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது கவனிக்கத்தக்கது.

உலகம் இப்போது படுவேகமாக மாறி வருகிறது. கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் புதிய வாய்ப்புகளுக்காகவும் அதிகளவில் இப்போது நகரங்களை நோக்கி வருகிறார்கள்.

india bangalore

இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு நகரங்களில் மிகப் பெரியதாக மாறி வருகின்றன. இதற்கிடையே உலகில் படுவேகமாக வளரும் 10 நகரங்கள் என்ற பட்டியல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நகரங்கள்: நகரங்களில் மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலக மக்கள்தொகையில் சுமார் 55% பேர் இப்போது நகர்ப்புறங்களில் வாழ்வதாக ஐநா அமைப்பே கூறுகிறது. இது வரும் 2050க்குள் 68% ஆக உயரும் என்று ஐநா கணித்துள்ளது. அதாவது சுமார் 250 கோடி பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி, முக்கிய தொழில்கள் அமைவது உள்ளிட்ட காரணங்களே பொதுமக்கள் கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களுக்கு வர முக்கிய காரணமாக இருக்கிறது. இது வரும் காலத்திலும் அதிகரிக்கும் என்பதால் வரும் நாட்களிலும் நகரங்கள் மேலும் மேலும் பெரிதாகவே வளரப் போகிறது.

தற்போது சுமார் 90% நகரமயமாக்கல் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் தான் இப்போது நடைபெறுகிறது. குறிப்பாக ஆசியா நகரங்கள் முக்கியமானதாக மாறி வருகிறது. இந்த நகரங்களின் விரிவடையும் பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் வணிகம் ஆகியவை உலக முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் இருக்கிறது. இதனால் முன்பைவிட தற்போது ஆசிய நகரங்களை முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்கிறது.

வேகமாக வளரும் நகரங்கள்: இதற்கிடையே சாவில்ஸ் வளர்ச்சி மையம் என்ற அமைப்பு உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் டாப் 15 நகரங்கள் கொண்ட லிஸ்டை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்து இந்த நகரங்களில் தான் வளர்ச்சி அதிகமாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் மொத்தம் 15 நகரங்கள் உள்ள நிலையில், அதில் 14 நகரங்கள் ஆசியாவைச் சேர்ந்தவையாக உள்ளது.

ஆசியா முழுக்க மக்களிடம் செல்வம் உயரும் நிலையில், இந்த நகரங்களில் நடுத்தர வர்க்கத்தினரின் மக்கள்தொகையும் உயர்ந்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வியட்நாம், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறதாம். இங்கு ஆண்டுக்கு $70,000 (ரூ.58 லட்சம்) சம்பாதிக்கும் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆதிக்கம்: இந்த லிஸ்டில் டாப் 15 நகரங்களில் 5 நகரங்கள் இந்தியாவில் இருந்து இருக்கிறது. அதேபோல சீனாவில் இருந்தும் ஐந்து நகரங்கள் இடம்பெற்றுள்ளது. இது தவிர வியட்நாமில் இருந்து இரு நகர்கள், சவுதி, பிலிப்பைன்ஸ் மற்றும் வங்கதேசத்தில் இருந்து தலா ஒரு நகரங்கள் உள்ளன.

பெங்களூர் டாப்: இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கர்நாடக தலைநகர் பெங்களூர் உள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் என்ற நகரம் 2ம் இடத்தில் உள்ளது. அடுத்த 3 முதல் 5 இடங்களில் முறையே டெல்லி, ஹைதராபாத், மும்பை என்று இந்திய நகரங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும், 11ஆவது இடத்தில் மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தா இடம் பெற்றுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 35% மக்கள் இப்போது நகரத்தில் தான் வசிக்கிறார்கள். இது வரும் காலத்தில் மிக வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் மக்கள்தொகை அதிகரித்து வரும் 2030ம் ஆண்டுக்குள் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக டெல்லி மாறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+