இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்பு: லோக்சபாவில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

மத்திய அரசின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், லோக்சபாவில் இன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2014-15ம் நிதியாண்டில் 5.4 முதல் 5.9 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்துப்போனதாலும், பிற நாடுகளின் பொருளாதார தாக்கத்தினாலும், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையை சீர் செய்ய மானிய சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.
இவ்வாண்டு இறுதிக்குள் பண வீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் மூலமாகவே, பண வீக்கத்தை குறைத்து விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
மானியங்களை நேரடியாக வங்கி கணக்கிற்கு அனுப்பும் நடைமுறைதான் சிறந்ததாக இருக்க முடியும். அல்லது மானியம் உரியவர்களுக்கு சென்று சேராது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியா ஈர்க்க உள்ளது.
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாக உள்ளது. இதன் பண மதிப்பு 32.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2012-13ல் இது 4.7 சதவீதமாக இருந்தது. இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications