2024 ஆண்டின் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு! அதிகாரப்பூர்வ தகவல்
டெல்லி: 2024-25 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. நாட்டின் ஜிடிபி 6.4% ஆகக் குறையும் என்றும் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி குறையும் என்று கூறப்பட்டுள்ளது. 2023- 24 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.2% இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் வளரும் நாடுகளில் முக்கியமானதாக இந்தியா இருக்கிறது. கொரோனா சமயத்தில் பல நாடுகளின் ஜிடிபி சரிந்த போதிலும், இந்தியாவின் ஜிடிபி மோசமான அளவுக்கு செல்லவில்லை.

பொருளாதார வளர்ச்சி:
கொரோனா முடிந்த பிறகு இந்தியா பொருளாதாரம் சிறப்பாகவே வளர்ச்சி அடைந்து வந்தது. இதற்கிடையே இப்போது 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்புகளைத் தேசிய புள்ளியல் அலுவலகம் கணித்துள்ளது. அதில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஜிடிபி 2024-25 நிதியாண்டில் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில் ஜிடிபி 8.2%ஆக இருந்த சூழலில், 2024-25 நிதியாண்டில் அது 6.4% குறையும் என்று தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மிதமான வேகத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தளவுக்குப் பொருளாதாரம் மெதுவாக வளர்ச்சி அடைந்தது இல்லை.
குறைகிறது:
இது தொடர்பாகத் தேசிய புள்ளியல் அலுவலகம் என்எஸ்ஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2023-24 நிதியாண்டிற்கான ஜிடிபி மதிப்பீடு (Provisional Estimate (PE) of GDP) 8.2% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், 2024-25 நிதியாண்டில் ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் நாமினல் ஜிடிபி 9.7% வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாகக் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 5.4% ஆக இருந்துள்ளது. அதைத் தொடர்ந்தே மத்திய ரிசரவ் வங்கி வெளியிட்ட கணிப்பில் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்தது. அதாவது முன்பு 7.2% வளர்ச்சி இருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்த நிலையில், அது 6.6%ஆக குறைத்து ரிசர்வ் வங்கி கணிப்பை வெளியிட்டது. ஆனால், அதைவிடக் குறைவான அளவே வளர்ச்சி இருக்கும் என்பதை இப்போது என்எஸ்ஓ அறிவித்துள்ளது.
நம்பிக்கை:
மந்தநிலை இருந்தபோதிலும், முக்கிய துறைகளின் வளர்ச்சி நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது. விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் வளர்ச்சி 3.8%ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது 2023-24 நிதியாண்டில் 1.4% ஆக இருந்தது. அதேபோல கட்டுமானத் துறை 8.6 சதவிகிதம், நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் 7.3 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு குடும்பத்திற்கு இப்போது எவ்வளவு செலவாகிறது என்பதைக் காட்டுவதே PFCE. இந்த PFCE 2023-24 நிதியாண்டில் 4% மட்டுமே உயர்ந்த நிலையில், இந்தாண்டு அது 7.3% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது சரக்கு மற்றும் சேவைகளுக்கு மக்கள் செலவிடும் தொகை என்பது கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அதிகரித்துள்ளது. அதேபோல அரசின் செலவுகளும் கூட நடப்பாண்டில் 4.1% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications