தங்க இறக்குமதியை குறைக்க புதிய மாஸ்டர் பிளான்..! ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா?
இந்தியாவின் அந்நியச் செலாவணி வெளியேறுவதை கட்டுப்படுத்தவும், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் (Current Account Deficit) குறைக்கவும் மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், உள்நாட்டுத் தங்கச் சந்தையை முறைப்படுத்தவும், வெளிநாடுகளில் இருந்து புதிதாகத் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்கவும் இந்தியப் புல்லியன் வர்த்தகக் கூட்டமைப்பு (Bullion Industry Association) ஒரு மாற்றுத் திட்டத்தை மத்திய அரசிடமும், ரிசர்வ் வங்கியிடமும் முன்வைத்துள்ளது.

'கோல்டு மெட்டல் லோன்' (GML) எனப்படும் தங்க உலோகக் கடன்கள் மற்றும் 'கோல்டு இடிஎஃப்' (Gold ETFs) முதலீடுகளுக்குப் புதிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் பெறப்படும் 'டோர் கோல்டு' (Dore Gold) அதாவது முழுமையாக சுத்திகரிக்கப்படாத தங்க கட்டிகளைப் பயன்படுத்தலாம் என்ற முக்கிய ஐடியாவை முன் வைத்துள்ளது.
கோல்ட் டோர் (Gold Dore) என்பது, தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு, சுத்திகரிப்பு செய்யப்படுவதற்கு முன்பு தயாரிக்கப்படும் அரை-தூய்மையான (Semi-pure) உலோகக் கட்டியாகும். இது பொதுவாக 50% முதல் 95% வரையிலான தங்கத்தைக் கொண்டுள்ளது. மீதமுள்ளவை பெரும்பாலும் வெள்ளி மற்றும் செம்பு போன்ற பிற உலோகங்களாகும். இது முதலீட்டுக்கு உகந்த தூய தங்கம் அல்ல. எனவே, இது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு (Refineries) அனுப்பப்பட்டு, அங்குள்ள இரசாயன முறைகள் மூலம் மீண்டும் உருக்கி மற்ற உலோகங்களை நீக்கி 99.9% தூய தங்கமாக மாற்றப்படுகிறது.
முன்னணி வங்கிகள்
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் சர்வதேச சந்தையில் இருந்து தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்யும் உரிமம் நாட்டின் 12 முன்னணி வணிக வங்கிகள் மட்டுமே உள்ளது. இந்த வங்கிகள் இரண்டு வழிகளில் உள்நாட்டுத் தங்க தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
முதலாவதாக, சர்வதேச வங்கிகளிடமிருந்து தங்கத்தைக் கடனாகப் பெற்று, அதனை இங்குள்ள பெரிய ஜுவல்லரி மற்றும் நகை உற்பத்தியாளர்களுக்குக் கடனாக (GML) வழங்குகின்றன.
இரண்டாவதாக, உள்நாட்டு மொத்தக் கொள்முதல் தேவையின் அடிப்படையில், சர்வதேச வங்கிகளுக்கு முழுத்தொகையையும் முன்கூட்டியே செலுத்தித் தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிக்கின்றன. இந்த இரண்டு முறைகளிலுமே பெருமளவிலான அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்கிறது.
என்ன இந்த 'டோர் தங்கம்' மாற்றுத் திட்டம்?
இந்தியப் புல்லியன் வர்த்தகக் கூட்டமைப்பு கொடுத்துள்ள புதிய பரிந்துரையின்படி, ஜுவல்லரி உற்பத்தியாளர்களுக்குத் தங்க உலோகக் கடன் (GML) வழங்குவதற்காக வெளிநாடுகளிலிருந்து புதிதாகத் தங்கத்தை இறக்குமதி செய்யும் தற்போதைய நடைமுறையை முற்றிலும் தவிர்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, உள்நாட்டுச் சுத்திகரிப்பு ஆலைகளால் (Domestic Refineries) இறக்குமதி செய்யப்பட்டுச் சுத்திகரிக்கப்படும் 'டோர் கோல்டு' (Dore Gold - அதாவது முற்றிலும் தூய்மைப்படுத்தப்படாத தங்கக் கட்டிகள்) பார்களை வங்கிகள் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த உலோக கலவையான டோர் தங்கக் கட்டிகளை இந்தியாவிலேயே அதிநவீன Refineries மூலம் 99.9% தூய்மையான தங்கக் கட்டிகளாக மாற்றிய பிறகு, அவற்றை வங்கிகள் ஜுவல்லரி உற்பத்தியாளர்களுக்குத் தங்க உலோகக் கடனாக மிக எளிதாக வழங்க முடியும். "இதன் மூலம் புதிய தங்கம் இறக்குமதி செய்யப்படுவது கணிசமாகக் குறையும்" என்று இந்த வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மறுசுழற்சி அதிகமாகும்.
கோல்டு இடிஎஃப் (Gold ETF)
இதே உத்தியை பங்குச்சந்தையில் பிரபலமாக இருக்கும் 'கோல்டு இடிஎஃப்' (Gold ETFs) எனப்படும் தங்க மியூச்சுவல் பண்டுகளும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, முதலீட்டாளர்கள் டிஜிட்டல் முறையில் கோல்டு இடிஎஃப்-களில் முதலீடு செய்யும் போது, அதற்கு நிகரான தங்கத்தை அந்த நிதி நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும்.
இனி அந்த நிறுவனங்களும் வெளிநாட்டுத் தங்கத்தை நம்பியிருக்காமல், உள்நாட்டிலேயே சுத்திகரிக்கப்பட்ட டோர் தங்கக் கட்டிகளைப் (Refined Dore Bars) கொள்முதல் செய்யத் தொடங்கினால், நாட்டின் ஒட்டுமொத்தத் தங்க இறக்குமதி அளவு வரலாறு காணாத அளவிற்குச் சரிவடையும். இது இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்று புல்லியன் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
மத்திய அரசின் முடிவு என்ன?
மத்திய அரசு இந்த மாற்றுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு தங்கக் கடன்கள் மற்றும் இறக்குமதிகள் மீது புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால், அது உள்நாட்டுச் ரீடைல் சந்தையில் தங்கத்தின் விலையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கவலை எழுந்துள்ளது. மேலும், சாமானியர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் எளிதாகத் தங்க நகைக்கடன் (Gold Loan) பெறும் தற்போதைய நடைமுறைகளையும், வட்டி விகிதங்களையும் இது நேரடியாகப் பாதிக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளதால், நடுத்தர மக்கள் அரசின் அடுத்தகட்ட கொள்கை முடிவுகளை கவனித்து வருகின்றனர்.
மேலும் டோர் தங்கத்தின் தூய்மையும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது, காரணம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு இணையாக தூய்மை உள்நாட்டில் சுத்திகரிக்கப்படும் தங்கத்திற்கு இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்த தரத்தில் ஏதேனும் குறைப்பாடு இருந்தால் இது நகை கடைகள் முதல் ஈடிஎப் வரையில் மொத்த நிதி சந்தையையும் பாதிக்கும்.
-
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications