சில்லறை விலை பணவீக்கம் உயர்வு: ரகுராம் ராஜன் கவலை
டெல்லி: சில்லறை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் பொருட்களுக்கான சில்லறை விலைகள் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்திருந்தது. பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருப்பதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி நவம்பர் மாதத்துக்கான சில்லறை விலை குறியீ்ட்டு எண் 11.24 சதவிகிதமாக இருந்தது. காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை அதிகரிப்பே சில்லறை விலை குறியீட்டு எண் உயர முக்கிய காரணம் என அரசு தெரிவித்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தி புள்ளிவிவரமும் கவலை தருவதாக உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்துக்கான தொழிற்சாலை குறியீட்டு எண் -1.8 சதவிகிதம் ஆக சரிந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் இது 8.4 சதவீதமாக இருந்தது.
விலைவாசி அதிகரிப்பும் தொழிற்சாலை உற்பத்தி சரிவும் மத்திய அரசுக்கு நெருக்கடிகளை அதிகப்படுத்தியுள்ளது. நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருப்பதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதத்தில் 10.09 சதவீதமாக இருந்த பணவீக்கம், நவம்பரில் 11.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மிகவும் சங்கடமான நிலையை ஏற்படுத்துவதாக டெல்லியில் ராஜன் தெரிவித்தார்.
10 சதவீதமாக இருந்தபோதே, அதிகமாக கருதிய நிலையில், அது மேலும் ஒன்றே கால் சதவீதம் அதிகரித்திருப்பது சிக்கலை ஏற்படுத்துவதாகவும் ராஜன் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீது வருகிற 18-ம் தேதி மறுஆய்வு நடக்கவுள்ள நிலையில், பணவீக்க உயர்வால் வங்கிக் கடன் வட்டியை ராஜன் மேலும் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications