இன்போசிஸ் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் ஆனந்த கண்ணீர்.. இனி ராஜயோகம் தான்.. CEO சொன்ன குட்நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகளாவிய ஐடி துறையை பெரும் மாற்றத்துக்கு உள்ளாக்கி வரும் நேரத்தில், இன்போசிஸ் நிறுவனம் மாறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றி வருகிறது.

பல நிறுவனங்கள் பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும்போது, இன்போசிஸ் பணியாளர் எண்ணிக்கையை நிலையாக வைத்துக்கொண்டு, புதியவர்களை பணியமர்த்துவதிலும் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வேலை எப்போது போகும் என அச்சத்தில் இருக்கும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது என்றால் மிகையில்லை.

Infosys IT Layoff Infosys No Layoffs Salil Parekh Interview Infosys Freshers Hiring 2026 AI Impact on IT Jobs Infosys Reskilling Strategy Infosys no layoffs 2026 Salil Parekh AI statement Infosys hiring 20 000 freshers Infosys reskilling program AI impact on IT jobs India Infosys campus recruitment 2026 TCS HCL Cognizant layoffs Infosys AI revenue 5 5 percent OpenAI Anthropic partnership Infosys Topaz Fabric Infosys AI structural shift IT services Salil Parekh Moneycontrol interview Infosys workforce stability AI expanding job scope Bengaluru IT company news - 2026 20000

சிஇஓ சொன்ன குட்நியூஸ்!

இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி சலில் பாரீக், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும், நிறுவனத்திற்கு பணியாளர்களை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் எந்த லேஆப்-ம் செய்யவில்லை என்றும், எதிர்காலத்திலும் பணிநீக்கம் செய்யத் திட்டமில்லை என்றும் சலில் பாரீக் தெரிவித்துள்ளார்.

20000 பிரஷ்ஷர் ஊழியர்கள்

இன்போசிஸின் இந்த உத்தியின் முக்கிய அம்சமாக, தொடர்ந்து நிறுவனத்தில் பிரஷ்ஷரகளை பணியில் அமர்த்தும் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப் போலவே சுமார் 20,000 புதிய பட்டதாரிகளை கல்லூரி கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது இன்போசிஸ்.

AI காரணமாக கோடிங் செய்யும் வேலைகள் குறைந்தாலும், பிரஷ்ஷரகளை சிக்கலான மற்றும் மதிப்பு சேர்க்கும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பயிற்றுவிக்க இன்போசிஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

AI பிரிவு வருவாயை

இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் AI பிரிவு சேவையில் மட்டும் சுமார் 5.5 சதவீதம் பங்களிக்கிறது. இந்தப் பங்களிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் சலில் பாரீக் தெரிவித்துள்ளார். உலகெங்கும் உள்ள நிறுவனங்கள் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நிலையில், AI இன்போசிஸின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய சக்தியாக மாறும் என தெரிவித்துள்ளது.

AI மாற்றத்துக்கு ஏற்ப பணியாளர்களை தயார்படுத்த இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு பெரும் அளவிலான திறன் மேம்பாட்டு (reskilling) திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. இதன் மூலம் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் AI கருவிகளுடன் இணைந்து பணியாற்றும் திறனைப் பெறுகின்றனர். AI-யுடன் பணியாற்றுவது மற்றும் AI இல்லாமல் பணியாற்றுவது ஆகிய இரு திறன்களும் இப்போது மிக முக்கியமானவையாக மாறியுள்ளன.

OpenAI, Anthropic உடன் ஒத்துழைப்பு

இன்போசிஸ் நிறுவனம் ஏஐ துறையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக உலகின் முன்னணி AI நிறுவனங்களான OpenAI மற்றும் Anthropic உடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் சொந்த தளமான Topaz Fabric போன்ற தளங்களைப் பயன்படுத்தி AI அடிப்படையிலான பெரிய அளவிலான மென்பொருள் சேவை மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் இன்போசிஸ் இதற்கு நேர்மாறான வழியைத் தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் டிசிஎஸ் 12500 ஊழியர்களை குறைந்தது, ஹெச்சிஎல் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது. உலகளவில் ஆரக்கிள், மைக்ரோசாப்ட், மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையிலான பணிநீக்கம் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+