ஈரான் போரால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!
சென்னை: மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் பதற்றம் மற்றும் 3 நாடுகளின் ராணுவ தாக்குதல் மூலம் பல நிறுவனங்கள் பாதிக்குள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அமேசான் டேட்டா சென்டர், ஆராக்கிள் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் வளைகுடா அலுவலகம் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் மூலம் இப்பகுதியில் இருக்கும் டெக் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் உள்ளனர்.
ஈரான் போர் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. இந்த மாற்றத்தின் முக்கிய பயனாளியாக இந்தியா உருவெடுக்கிறது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், டேட்டா சென்டர் மற்றும் கிளவுட் சேவைகள் துறையில் இந்தியா ஒரு முக்கிய ஹப் ஆக மாறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவை நோக்கி பயணம்
உலகின் முன்னணி கிளவுட் சேவை நிறுவனங்களான கூகுள் கிளவுட், அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசாப்ட் அசூர் ஆகியவை இந்தியாவில் ஏற்கனவே டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்தில் இருந்தாலும் ஈரான் போரால் வளைகுடா நாடுகளில் திட்டமிட்டு இருந்து புதிய டேட்டா சென்டர், விரிவாக்க திட்டங்களை மொத்தமாக கைவிடப்பட்டு தற்போது இந்தியாவில் தங்கள் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த ஆர்வம் காட்டுகின்றன.
டேட்டா சென்டர் என்பது ஆபீஸ் கட்டிடம் போல் இல்லை, வேண்டுமென்றால் உடனே இடம் மாற்றம் செய்ய முடியாது. இதில் மிகப்பெரிய நெட்வொர்கிங் மற்றும் ஹார்ட்வேர் செட்டப் இருக்கும் காரணத்தால் நிலையான, அமைதியான, கொள்கை அளவில் சாதகமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
ஈரான் போர் எப்போது முடியும் என்பது தெரியாமல் இருக்கும் வேளையில், டெக் நிறுவனங்கள் வளைகுடா திட்டத்தில் முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் பல நிறுவனங்கள் இந்தியாவில் புதிய திட்டங்கள் அல்லது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த வெளிநாட்டு கிளவுட் சேவை நிறுவனங்கள், இந்திய டேட்டா சென்டர் நிறுவனங்களுடன் 'co-location' ஒப்பந்தங்களை செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம், தங்கள் public cloud சேவைகளுக்கான data hosting வசதிகளை இந்தியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளன.
இந்தியாவுக்கு பெரிய வாய்ப்பு
வெளிநாட்டு கிளவுட் சேவை நிறுவனங்கள் co-location ஒப்பந்தங்களை செய்ய திட்டமிட்டுள்ளது மூலம் இந்திய நிறுவனங்களான CtrlS, Sify, NTT, CapitaLand மற்றும் Nxtra போன்ற நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக, AWS இந்த நிறுவனங்களுடன் இணைந்து புதிய டேட்டா சென்டர்களை உருவாக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யோட்டா டேட்டா சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ சுனில் குப்தா கூறுகையில் கடந்த 3 முதல் 4 வாரங்களில், டேட்டா சென்டர் திறன் தேவையில் திடீரென உயர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 200 முதல் 500 மெகாவாட் (MW) வரை புதிய தேவைகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து வரும் நிறுவனங்கள் இந்த ஒப்பந்தங்களை விரைவாக முடிக்க முயற்சி செய்து வருகின்றன. ஒரு கிலோவாட் (kW)க்கு 60 டாலர் என்ற அதிகப்படியான கட்டணத்திலும் ஒப்பந்தம் செய்ய தயாராக உள்ளனர். இது நீண்டகால முதலீடு, நீண்டகால ஒப்பந்தங்களும் கொண்ட ஒரு துறை என்பதால் இந்திய நிறுவனங்களுக்கு இது பெரும் ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
இதன் மூலம் இந்தியா அடுத்த 5 வருடத்தில் மத்திய கிழக்கு மற்றும் ஆசியா இடையிலான முக்கிய டிஜிட்டல் மையமாக மாற்றும் வாய்ப்பு உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications