வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு - ஆகஸ்ட் 31 கடைசி நாள்
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பாகப் புது விண்ணப்ப முறையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனால், வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலக்கெடுவை நீட்டித்து அறிவிக்குமாறும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை எச்சரித்து இருந்தது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யத் தவறும்பட்சத்தில் அதற்குரிய காலகட்டத்தில் ரூபாய் ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என்று அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட வரி செலுத்துபவர்களுக்கு இந்த அபராதத் தொகை ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஜூலை 31ஆம் தேதி காலக்கெடுவாகத் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications