"தங்கம் விலை குறையும்!" ஆனா அடுத்த வரியிலேயே வெடியை வைத்த ஆனந்த் சீனிவாசன்! என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. இந்தளவுக்கு தங்கம் விலை உயரும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதற்கிடையே தங்கம் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம் இறக்கம் என மாறி மாறி இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 4ம் தேதி முதல் தங்கம் விலை சில நாட்கள் தொடர்ச்சியாக குறைந்தது. கடந்த ஏப்ரல் 8ம் தேதி குறைந்தபட்சமாக 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.822க்கு சென்றது.

தங்கம் விலை
ஆனால், அதன் பிறகு பட்டென பறந்த தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8745க்கு விற்பனையானது. அதாவது வெறும் 4 நாட்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.500க்கு மேல் உயர்ந்துள்ளது. இதற்கிடையே தங்கம் விலை ஏற்ற இறக்கும் குறித்து ஆனந்த் சீனிவாசன் சில கருத்துகளை கூறியிருக்கிறார்..
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டது. இடையில் சில நாட்களாக குறைந்த தங்கம் விலை, மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இப்போது ரூ.8500ஐ தாண்டிவிட்டது. நான்கு நாட்கள் தங்கத்தை வாங்க நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், இதுபோன்ற நேரங்களில் தங்கத்தை வாங்காமல் 38% குறையும் 36% குறையும் என காத்திருக்கிறீர்கள்.
தங்கம் என்பது ஒரு ஆபத்பாண்டவன். ரூபாய் மதிப்பு சரிவதும் கூட தங்கத்திற்கு சாதகமாகவே இருக்கிறது. எல்லாம் சேர்த்து வைத்து பார்க்கும் போது தங்கத்தில் நல்ல செய்தியாகவே இருக்கிறது.
தங்கம் விலையும் குறையலாம்
தங்கம் விலை இடையில் சில நாள் குறைந்ததை கண்டு சிலர் பயந்து போய் இருக்கிறார்கள். அதுபோல அஞ்சுவோர் முதலீடே செய்யக்கூடாது. அமைதியாக வங்கியில் பிக்சடு டெபாசிட்டில் பணத்தை போட்டுவிட்டு இருக்கலாம். பிக்சடு டெபாசிட்டில் உங்களது பணம் பணவீக்கத்தில் மெல்ல கரைந்து போகும். எந்தவொரு சொத்தாக இருந்தாலும் அதன் மதிப்பு அதிகரிக்கவும் குறையவும் செய்யும். தங்கம் அதில் விதிவிலக்கு இல்லை.
தங்கம் விலை ஒரு தடவை 1800 டாலரில் இருந்து 1100 டாலருக்கு குறைந்துள்ளது. அதாவது 700 டாலர் ஒரே நேரத்தில் குறைந்தது. ஆனால், அந்த சமயத்தில் நமது ரூபாய் மதிப்பும் சரிந்ததால் இந்தியாவில் தங்கம் விலை பெரிளவில் சரிந்தது போல நமக்கு தெரியவில்லை. இந்த தடவையும் ரூபாய் விலை சரிந்ததும் தங்கம் விலை உயர ஒரு காரணமாக இருக்கிறது.
பயப்படக்கூடாது
இப்போது சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை 3000 டாலரை தாண்டிவிட்ட நிலையில், அது 1800 டாலருக்கு போனால் டாலருக்கு ரூபாய் மதிப்பு 120ஆக இருக்கும். எனவே, அப்போதும் தங்கம் விலை பெரியளவு குறைந்தது போல நமக்கு தெரியாது. ஆனால், தங்கம் விலை லேசாக அதிகரித்து குறைவதற்கே நீங்கள் பயந்தீர்கள் என்றால் முதலீடு செய்ய வேண்டாம்.
அமெரிக்க பங்குச்சந்தை டவ் ஜோன்ஸ் 1928 முதல் 1954 வரை 800ஐ தாண்டவில்லை. 1928ல் விழுந்த மார்க்கெட் 25 ஆண்டுகளுக்கு பின்னரே உயர்ந்தது. ஜப்பானிலும் கூட அதுபோல நடந்தது. ஓவராக அதிகரித்துவிட்டால் அதுபோல மீண்டும் சரிவில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆகும்" என்றார்.
அடுத்த வரியிலேயே வெடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்
அதேபோல அவர் தனது மற்றொரு வீடியோவில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியை குறைக்க வாய்ப்பிருக்கும் நிலையில், அப்போது தங்கம் விலை புதிய உச்சத்தை தொடவுள்ளது.
மேலும், தங்கம் விலை 38% வரை குறையவுள்ளதாக சர்வதேச வல்லுநர் ஒருவர் கணித்திருந்த நிலையில், அந்த கணிப்பு தொடர்பாகவும் ஆனந்த் சீனிவாசன் மற்றொரு வீடியோவில் தனது கருத்துகளை கூறியிருந்தார். அதாவது டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் ஆகியோர் பவரில் இருக்கும்வரை புவிசார் அரசியல் பதற்றங்கள் முடிவுக்கு வராது என்றும் இதனால் தங்கம் விலை 38% குறைய வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கூறியிருந்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications