For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2018ல் புதிய 100 ரூபாய் ரிலீஸ்... பழைய 100 ரூபாயும் செல்லுமாம்!

புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய 100 ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என தெரிகிறது.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மக்களே உங்கள் கைகளில் புதிய 100 ரூபாய் தவழ உள்ளது. ஆம் நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய 100 ரூபாய் நோட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய 100 ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என தெரிகிறது.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.200 நோட்டுக்களை அச்சடிக்கும் பணி நிறைவு பெற உள்ளது. அதனை தொடர்ந்து புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்

மத்திய அரசு கடந்தாண்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்து புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தது. புதிய 2000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய 200,50 ரூபாய் நோட்டுக்கள்

புதிய 200,50 ரூபாய் நோட்டுக்கள்

இதற்கிடையே புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. தற்போது 200 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி முடிந்த பின்னர் புதிய 100 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பழைய நோட்டுக்கள் செல்லும்

பழைய நோட்டுக்கள் செல்லும்

புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய 100 ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என தெரிகிறது. புதிய 100 ரூபாய் நோட்டின் நீளத்திலும், அகலத்திலும் மாற்றம் இருக்காது. ஆனால் நிறத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

ஏடிஎம்மில் கிடைக்கும்

ஏடிஎம்மில் கிடைக்கும்

சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்த புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் அளவுகளில் வித்தியாசம் உள்ளதால், வங்கிகளின் மூலம் மட்டுமே அவை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அளவில் மாற்றம் இருக்காது என்பதால் ஏடிஎம் வழியாக இந்த 100 ரூபாய் மக்களை எளிதில் சென்று சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
New Rs 100 notes around April next year. The RBI, according to reports, is expected to start printing new designs of the currency notes around that time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X