100% எத்தனால்.. பெட்ரோலுக்கு முழுக்கு போட நிதின் கட்கரி திட்டம்.. இதுதான் இந்தியாவின் எதிர்காலமாம்!
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியா விரைவில் 100 சதவீத எத்தனால் கலவையை (ethanol blending) அடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல், இந்தியா, எரிசக்தியில் சுயசார்பு நிலைக்கு வர வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோல் மக்கள் பயன்படுத்த துவங்கியிருக்கும் காரணத்தால் அரசு அதிகப்படியான நிதியை சேமித்துள்ளது. இதேவேளையில் இந்தியாவில் அதிகப்படியான எத்தனால் உற்பத்தி திறன் இருக்கும் நிலையில் எரிபொருள் பயன்பாட்டில் சுயசார்பு நிலையை எட்ட எத்தனால் பாலமாக இருந்து வருகிறது.

எரிசக்தி சுயசார்பு அவசியம்
இந்திய பசுமை ஆற்றல் கூட்டமைப்பின் பசுமைப் போக்குவரத்து மாநாட்டில் பேசிய நிதின் கட்கரி "இன்று மத்திய கிழக்கு போர் காரணமாக நாம் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்கிறோம். எனவே எரிசக்தி துறையில் சுயசார்பை விரைவில் அடைய வேண்டும்" என்று கட்கரி கூறினார்.
தற்போது இந்தியா தனது எண்ணெய் தேவையில் 87 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.22 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இந்த இறக்குமதி மட்டுமல்ல, அது சுற்றுச்சூழல் மாசையும் அதிகரிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
CAFE III தரநிலைகள்
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் Corporate Average Fuel Efficiency III (CAFE III) தரநிலைகள் மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் மாற்றம்
தற்போது E20 பெட்ரோலை இந்திய வாகனங்கள் சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்த முடிகிறது. ஆனால் பிரேசில் போன்ற நாடுகள் ஏற்கனவே 100 சதவீத எத்தனால் கலவை அடிப்படையிலான எரிபொருளை பயன்படுத்தும் நிலைக்கு அடைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
கிரீன் ஹைட்ரஜன் எதிர்கால எரிபொருள்
கிரீன் ஹைட்ரஜன் தான் இந்தியாவின் எதிர்கால எரிபொருளாக இருக்கும் என்று கட்கரி வலியுறுத்தினார். எப்படி எலக்ட்ரிக் வாகன துறை பெரிய அளவிலான மாற்றத்தை உருவாக்கியதோ அதேபோன்க மாற்றத்தை ஹைட்ரஜன் எரிபொருள் ஏற்படுத்தும். ஆனால் ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் இயக்கச் செலவை குறைக்க வேண்டும் என்றும், 1 கிலோ ஹைட்ரஜனை 1 டாலர் விலையில் உற்பத்தி செய்தால் இந்தியா எரிசக்தி ஏற்றுமதி நாடாக மாறும் என்றும் அவர் கூறினார்.
இதேபோல் கழிவுகளிலிருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், இந்தியாவில் வட்டப் பொருளாதாரத்தை அதாவது circular economy ஊக்குவிப்பதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் இக்கூட்டத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பெட்ரோலில் எத்தனால் கலவை அதிகரிப்பது மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பது, இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியை குறைத்து, செலவை குறைக்க உதவும். இது சுற்றுச்சூழல் மாசுப்பாட்டையும் குறைக்கும்.
அனைத்தையும் விட முக்கியமாக இந்தியாவில் வளைகுடா, ரஷ்யா, அமெரிக்கா என எந்த நாடும் இந்தியாவுக்கான எரிபொருள் சப்ளையை நிறுத்தினாலும் சுயசார்புடன் இருக்கும் போது எவ்விதமான நெருக்கடியும் இல்லாமல் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும்.
இதேபோல் எத்தனால் கலப்பு மூலம் வரும் வாகன இயக்க பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கொள்கை அளவிலான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications