மானியமற்ற கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.105 குறைந்தது
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போதிலும், அதற்கேற்றாற் போல் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறையவில்லை. அதேநேரத்தில், மானியமற்ற சிலிண்டருக்கான விலை ரூ.105 குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைப்பினால் அறிவிக்கப்பட இருந்த சமையல் எரிவாயு விலை குறைப்பு, மானியத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை முன்பு ரூ.705 ஆக இருந்தது. இது மானியத்துடன் சேர்ந்த விலையாகும். இதில் சமையல் எரிவாயு விலை ரூ.410. மானியம் விலை ரூ.295. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைந்துள்ளது. அதாவது தற்போது மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.600 ஆக விற்கப்படுகிறது. இதில் சமையல் எரிவாயு விலை ரூ.410, மானியம் விலை ரூ.190 ஆகும். அதேபோல 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 320 ரூபாய் குறைந்துள்ளது.
ஆனால் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்துடன் வாங்குவோர் அதே ரூ.410 கொடுத்து தான் வாங்கவேண்டி உள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 54 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள் போலி இணைப்புகள். அதாவது ஒரு வீட்டுக்கு இரட்டிப்பான இணைப்புகள் இருக்கும். இப்படிப்பட்ட இணைப்புகள் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வங்கி கணக்கில் பெறுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆதார் அட்டை கொண்டு மானியத்திற்கான அடிப்படை தொகையை வங்கி கணக்கில் பெற்றுள்ளனர். ஆதார் அட்டை இல்லாதவர்கள் வங்கி மற்றும் கேஸ் ஏஜென்சியிடம் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம் -
வீட்டு கேஸ் சிலிண்டர்... மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி.. அதிரடியாக எடுத்த முடிவு -
வழக்கத்தை விட 30% கூடுதலாக எல்பிஜி உற்பத்தி.. சிலிண்டர் தட்டுப்பாடு வராது! மத்திய அரசு விளக்கம்! -
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அச்சம்.. அதிகாலையிலேயே பெட்ரோல் பங்க்குகளில் அலைமோதும் மக்கள் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications