சொல்லி அடித்த பஜாஜ்.. திணறுதே ஓலா.! இதுவரை இப்படி நடந்ததே இல்லை! அடடே இது பெரிய ட்விஸ்ட்
டெல்லி: சில மாதங்களுக்கு முன்பு வரை எலக்டிரிக் டூவீலர் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய ஓலா நிறுவனம் இப்போது தனது இடத்தை மெல்ல இழந்து வருகிறது. இப்போதும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது ஓலா முதலிடத்தில் இருந்தாலும், பஜாஜ் நிறுவனம் தனது இருப்பை மெல்ல அதிகரித்தே வருகிறது. இதனால் எலக்டிரிக் டூவீலர் சந்தையில் ஓலா ஆதிக்கம் முடிவுக்கு வரப் போகிறது.
முதலில் ரைட் ஹெய்லிங் நிறுவனமாக நமக்கு அறிமுகமானது தான் ஓலா.. இந்த டாக்ஸி பிஸ்னஸ் ஓலாவுக்கு ஹிட் அடிக்க, அவர்கள் மெல்ல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் நுழைந்தனர்.

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலையால் டூ வீலர் பயன்படுத்துவோர் வேகமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது இதுதான் நடந்தும் வருகிறது.
ஓலா: இதற்காகக் கடந்த 2021ம் ஆண்டிலேயே ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டது.. ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. விலை சற்று அதிகம் என்றாலும் கூட பெட்ரோல் போடத் தேவையில்லை என்பதால் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் புக்கிங்களும் குவிந்தன.
ஆனால், தொடக்கத்திலேயே ஓலா பிரச்சினைகளைச் சந்தித்து. சொன்ன நேரத்தில் டெலிவரி தர முடியவில்லை. பல மாதங்களுக்கு பிறகே டெலிவரி செய்தனர். இருப்பினும், மின்சார வாகன மார்கெட்டில் பெரிய போட்டி இல்லாததால் ஓலா அந்த சந்தையை ஆதிக்கம் செலுத்தியது. ஒரு கட்டத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சந்தையில் சுமார் 60% ஓலா வசமே இருந்தது.
பிரச்சினைகள்: தொடக்கத்தில் மக்கள் ஓலா ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டினாலும், அதன் பிறகு கடந்த சில மாதங்களில் நிலைமை மொத்தமாக மாறியது. இதற்கு முக்கிய 2 காரணங்கள் இருந்தன. முதலில் ஓலாவின் சர்வீஸ்.. ஒரு முறை கொடுத்துவிட்டு அப்படியே விட்டுவிட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது டெக் பொருட்கள் போல இல்லை.. டூவீலர்களை பொறுத்தவரை விற்பனைக்குப் பிறகு தரப்படும் சர்வீஸ்கள் ரொம்பவே முக்கியம். ஆனால், ஓலா தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிக மோசமான சர்வீஸ் கொடுப்பதாகப் புகார்கள் குவிகிறது.
குறிப்பாகப் பல நகரங்களில் நூற்றுக் கணக்கான சர்வீஸ் முடியாமல் குவிந்து கிடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இதனால் வெறுப்படைந்து சிலர் தங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போட்டு எரிக்கும் நிகழ்வுகளும் கூட நடந்துள்ளது. அந்தளவுக்கு நிலைமை மோசமாகச் சென்றுவிட்டது. அதேபோல மற்றொரு காரணம் மக்களுக்குக் கிடைத்த ஆப்ஷன். முதலில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஓலா மட்டுமே பெயர் தெரிந்த நிறுவனமாக இருந்தது. இதனால் மக்கள் ஓலாவையே வாங்கினர்.
ஓவராக பேசிய ஓலா ஓனர்.. மரண அடி கொடுத்த பொதுமக்கள்.. ஒரே நாளில் பல கோடி நஷ்டம்! என்னாச்சு
மாறும் சந்தை: ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ எனப் பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் ஓலாவின் மார்கெட் ஷேர் மளமளவெனச் சரியத் தொடங்கிவிட்டது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட் கடந்த செப். மாதம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது.
இதில் ஓலா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் 60% மார்கெட் ஷேர் கொண்டிருந்த ஓலா, முதல்முறையாக 30% கூழ் சரிந்துள்ளது. ஓலாவின் மார்கெட் ஷேர் இப்போது வெறும் 27%ஆக மட்டுமே இருக்கிறது. சர்வீஸ் சார்ந்த பிரச்சினைகளே ஓலாவை மக்கள் வாங்கத் தயங்க முக்கிய காரணமாக இருக்கிறது.
பஜாஜ்: அதேநேரம் இத்தனை காலம் இரண்டாம் இடத்தில் இருந்த டிவிஎஸ் நிறுவனத்தை இப்போது பஜாஜ் ஓவர்டேக் செய்துள்ளது. எலக்டிரிக் ஸ்கூட்டர் பிரிவில் பஜாஜ் நிறுவனம் சேதக் என்ற மாடலை அறிமுகம் செய்த நிலையில், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே பஜாக் இப்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஓராண்டில் பஜாஜ் நிறுவனம் எலக்டிரிக் ஸ்கூட்டர் சந்தையில் 192% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் சில மாதங்களில் ஓலாவை பஜாஜ் ஓவர்டேக் செய்து நாட்டின் மிக பெரிய எலக்டிரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டாவது இடத்திலும் டிவிஎஸ் இடத்தில் இருக்கும் என்று வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
சொல்லியடித்த பஜாஜ்: இதற்கிடையே பஜாஜ் சிஇஓ ராஜீவ் பஜாஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளும் இப்போது டிரெண்டாகி வருகிறது. அதாவது அவர், "நான் எப்போதும் பஜாஜ் (ஆட்டோ), (ராயல்) என்ஃபீல்டு மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களையே நம்புவேன். ஏனென்றால் அவர்களுக்கு என ஒரு டிராக் ரெக்கார்ட் இருக்கிறது. அவர்கள் சாம்பியனாக உள்ளனர்.
முக்கிய நிறுவனங்களின் நிலையே நின்றாக இருக்கிறது. எனவே, நான் ஏன் , ஸ்டார்ட்-அப்களை நம்ப வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், ஓலா நிறுவனம் இதுவரை எதுவும் உற்பத்தி செய்யவில்லை என்றும் அவர்கள் முதலில் எதாவது செய்து காட்டட்டும் என்பது போலவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications