டெய்லி ரூ.1000 கோடி இழப்பு சமாளிக்க முடியாமல் தடுமாறும் மத்திய அரசு! ரெண்டுல ஒன்னு கண்டிப்பா நடக்கும்

Subscribe to Oneindia Tamil

ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லாமல் தொடர்வதற்காக அரசு எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) பெரும் இழப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. 5 மாநில தேர்தல் காரணமாக மத்திய அரச எரிபொருள் விலையை உயர்த்தாமல் இருந்தது, இதேவேளையில் கச்சா எண்ணெயிவ் 50 டாலருக்க குறைவாக இருந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை கையைமீறி போயுள்ளது என்பது தான் உண்மை.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளபடி, மேற்கு ஆசிய போர் நெருக்கடி தொடங்கியதில் இருந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தினமும் சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த இழப்பு 2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

Petrol diesel omcs 1000 crore daily loss west asia india oil companies under recovery 2 lakh crore no bailout for omcs 2026 petrol diesel price hike likely india rajnath singh igom meeting fuel crisis modi work from home fuel saving india 60 days crude oil reserves 45 days lpg stock india west asia crisis impact on petrol prices oil marketing companies absorbing losses tamil nadu petrol diesel price fear common man burden fuel price hike defence minister rajnath singh energy security india natural gas 60 days reserve modi appeal reduce petrol diesel usage 1000 2 IGoM 60 45 60

அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு நெருக்கடி

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வை உள்நாட்டு விலையில் பிரதிபலிக்காமல் இருக்க, இந்தியாவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை தியாகம் செய்து விலையை நிலையாக வைத்துள்ளன.

இதனால் அவை தினமும் 1000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. பொதுமக்களுக்கு அதிக விலை சுமையை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளையில் இதுவரையில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான எவ்விதமான மானிய திட்டத்தையும் அல்லது பெயில்அவுட் திட்டம் எதுவும் இதுவரையில் அறிவிக்கவில்லை. இப்படியிருக்கையில் 2 லட்சம் கோடி அளவிலான நிதி நெருக்கடியை எப்படி மத்திய அரசு தீர்க்கும்?

ராஜ்நாத் சிங் கூட்டம்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து அமைச்சர்கள் குழு (IGoM) கூட்டத்தில், உலக நெருக்கடியால் இந்திய மக்கள் மீது எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அரசு தயார்நிலையில் உள்ளது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால் இந்த இழப்புகள் நீண்டகாலம் தொடர்ந்தால் அரசுக்கு பெரும் சவாலாக மாறும் என்பதும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு? விலை உயர்வு அல்லது வரி சுமை?

இந்த பெரும் இழப்பை நீண்டகாலம் தொடர முடியாது என்பதால், விரைவில் இழப்புகளை சமாளிக்கும் வகையிலும், தற்போதைய விலை நிலவரத்திற்கும் ஏற்ற வகையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்படலாம் அல்லது புதிய வரி அல்லது செஸ் விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது சாமானிய மக்களின் குடும்பங்களின் அன்றாட செலவுகளை அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி செலவு, பொருட்கள் கொள்முதல், பயணம் என பல விஷயங்களில் மறைமுகமாக பாதிப்பு ஏற்படும். எனவே அரசு இந்த இழப்பை எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது.

மோடியின் வேண்டுகோள்

இந்த நெருக்கடியை சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்துமாறும், பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை தேவைக்கு அதிகமாகக் குறைக்குமாறும், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எரிபொருள் இருப்பு

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற 5-வது அனைத்து அமைச்சர்கள் குழு (IGoM) கூட்டத்தில் இந்தியாவில் தற்போது 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு, 60 நாட்கள் இயற்கை எரிவாயு இருப்பு மற்றும் 45 நாட்கள் எல்பிஜி (சமையல் எரிவாயு) இருப்பு ஆகியவற்றை கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+