2005ம் ஆண்டுக்கு முன் அச்சிட்ட நோட்டுகளை மாற்ற இன்னும் 10 நாட்கள் மட்டுமே கெடு
டெல்லி: இந்தியாவில் 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் வருகிற 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. குறிப்பாக 500, 1,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் அதிகம் புழங்குகின்றன. இந்திய பொருளாதாரத்தை நசுக்க பாகிஸ்தான் போன்ற சில அண்டை நாடுகளும் இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகின்றன.

2005 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா அச்சிட்டு வரும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு தன்மை கொண்டவை. இதனால் 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட இதே மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை நாட்டின் பாதுகாப்பு கருதி இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்தது.
அதன்படி 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து அவற்றை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அல்லது தங்களுடைய வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி என்று முன்பு ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.
எனினும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இதற்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்தது. அதன்படி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வருகிற 30 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே இதற்குள் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்கும்படி ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பது எளிதான ஒன்றாகும். இந்த நோட்டுகளின் பின்புறத்தின் கீழ் ரூபாய் நோட்டு அச்சடித்த ஆண்டு இடம் பெற்றிருக்காது. அதே நேரம் 2005க்கும் ஆண்டுக்கு பின்பு அச்சிடப்பட்ட இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தின் கீழ் பகுதியில் அச்சிட்ட ஆண்டு தெளிவாகத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications