தோசை விற்றே மாதம் 6 லட்சம் வருமானம்.. ஐடி ஊழியர்களையே அலற விட்ட வியாபாரி
டெல்லி: ஐடி ஊழியர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் இங்கு ஒருவர் மாதம் ரூ. 6 லட்சம் சம்பாதித்து வருகிறார். சாதாரணமாகத் தோசை விற்கும் இவருக்கு மாத செலவெல்லாம் போக மட்டும் பல லட்சம் லாபம் நிற்கிறதாம். இவர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அது பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
இந்த காலத்தில் ஐடி தான் அதிக சம்பளம் தரும் வேலையாக இருக்கிறது. அதிலும் கூட நாம் மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெறப் பல ஆண்டுகள் உழைக்க வேண்டி இருக்கும்.

பெரிய லாபம்: ஆனால், இங்கே ஐடி ஊழியர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒருவர் மாதம் ரூ. 6 லட்சம் சம்பாதிக்கிறார். அவர் ஏதோ பெரிய பிஸ்னஸ் செய்கிறார் என்றெல்லாம் நினைக்காதீர்கள். சாதாரணமாகத் தோசை விற்று வரும் அவருக்குத் தினசரி ரூ. 20 ஆயிரம் ரூபாய் வருமானமாக நிற்கிறதாம். அதன்படி பார்த்தால் மாதம் ரூ. 6 லட்சத்தை அப்படியே அள்ளுகிறார். கேஸ், சம்பளம் எல்லாம் போகக் கூட மாதம் ரூ. 3 முதல் 3.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.
தோசை விற்பனை மூலம் இப்படி லட்சங்களைச் சம்பாதிக்கும் இந்த வியாபாரி குறித்த தகவல்களை நவீன் கொப்பரம் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். எந்தவொரு நாட்டிலும் மாத ஊதியம் பெறுவதைக் காட்டிலும் சொந்தமாக ஒரு தொழிலை நேர்த்தியாகச் செய்தால் யாராக இருந்தாலும் மிகப் பெரிய லாபத்தை அள்ள முடியும் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
வருமான வரி செலுத்துவதில்லை: இது தொடர்பாக நவீன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "எனது வீட்டின் அருகே தேசை விற்கும் ஒருவர் தினசரி 20 ஆயிரம் ரூபாயை வருமானத்தைக் கொண்டு இருக்கிறார். இதன் மூலம் மாதம் அவருக்கு சுமார் 6 லட்சம் வருமானமாகக் கிடைக்கிறது. மற்ற செலவுகள் எல்லாம் போக அவர் மாதம் ரூ. 3 முதல் ரூ. 3.5 லட்ச ரூபாயை லாபமாக எடுக்கிறார். அதேநேரம் அவர் ஒரு ரூபாய் கூட வருமா வரி செலுத்துவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு தரப்பினர் தேசைக்கடைக்காரரின் கடின உழைப்பைப் பாராட்டினாலும் மற்றொரு தரப்பினர் இவ்வளவு சம்பாதிக்கும் போது எப்படி வருமான வரி கட்டாமல் இருக்க முடியும்.. இது தவறான போக்கு என்று விமர்சித்து வருகிறார்கள்.
செக் வைக்கும் நெட்டிசன்கள்: நமது நாட்டில் மாதம் ரூ. 60 ஆயிரம் சம்பாதிக்கும் ஒருவர் சுமார் 10% தொகையை வருமான வரியாகக் கட்ட வேண்டும். ஆனால், இவர் லட்சக் கணக்கில் லாபத்தைப் பார்த்துவிட்டு எப்படி ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்டாமல் இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அனைவருமே பேங்கிங் நெட்வோர்க்கில் வர வேண்டும் என்றும் அப்போது தான் அனைவரும் முறையான வரியைச் செலுத்த முடியும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன்கள்: இது தொடர்பாக அபய் கபூர் என்ற நெட்டிசன், "பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்ட போதும் சரி, யுபிஐ அறிமுகமான போதும் சரி பணம் பெரியளவில் ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்யப்படுவது குறைகிறது. அதேநேரம் யுபிஐ டேட்டா அரசிடம் இருப்பதால் அதை வைத்து சாலையோர வியாபாரிகளை வருமான வரி வரம்பிற்குள் கொண்டு வருவது எளிதாக இருக்கும். எனவே, அரசு இதை நான் செய்யும் என்று நினைத்தேன். ஆனால், அரசு அதுபோல எதுவும் செய்யவில்லை. இவர்கள் யாருமே வருமான வரி ரிட்டர்னை கூட தாக்கல் செய்வது இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் மற்றொரு நபர். "இவர்களுக்கு எளிதாகப் பணம் வருவதில்லை. கார்ப்பரேட் இன்சூரன்ஸ் கூடப் பெறுவதில்லை.. கார்/ வீடு/ பைக் கடன்கள் பெறுவது கூட கடினம்.. பிஎஃப் இல்லை, உறுதியான வருமானமும் இல்லை.. மேலும், ரூ. 60 ஆயிரம் சம்பாதிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் கட்டும் வருமான வரியை விட இவர்கள் ஜிஎஸ்டி அதிகம் செலுத்த வேண்டி இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications