கோடி ரூபாய் சேர்க்கலாம்.. மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் போதும்.. இதுதான் SIP சேமிப்பின் மேஜிக்!
சென்னை: நம் அனைவருக்கும் பணத்தைச் சேமித்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதை எப்படிச் செய்ய வேண்டும் எனத் தெரியாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பணத்தைச் சேமிக்க ஒரு ஈஸியான வழி இருக்கிறது. பல பொருளாதார வல்லுநர்களும் அந்த முறையையே பரிந்துரைக்கிறார்கள். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது முதலீடு தொடர்பான பல விளம்பரங்களில் சிப் (SIP) என்ற வார்த்தையைக் கேட்டிருப்போம். சிப் செய்யுங்கள்.. சிப் முதலீடு செய்யுங்கள் என்று ஏகப்பட்ட விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், பலருக்கும் சிப் என்றால் என்ன.. இது ஏன் முக்கியம் என்று தெரியவில்லை. இது குறித்து நாம் எளிமையாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.

சிப் என்றால் என்ன!
சிப் என்றால் Systematic Investment Plan அதாவது நிலையான முதலீட்டுத் திட்டம் என்று பொருள். மியூச்சுவல் ஃபண்டு, பங்குகள் என எதுவாக இருந்தாலும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதே சிப் எனப்படும். அதாவது குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டு அல்லது பங்குகளில் முதலீடு செய்வதன் பெயர் சிப் இல்லை. எதுவாக இருந்தாலும், அது தங்கமாகவே இருந்தாலும் மாதாமாதம் நிலையான தொகையை முதலீடு செய்வதே சிப் எனப்படும்.
சிப் மூலம் தொடர்ச்சியாக முதலீடு செய்தால் அது, காலப்போக்கில் செல்வத்தை அதிகரிக்க உதவும். அதாவது சிப் முறையில் மார்கெட் ஏறினாலும் சரி, சரிந்தாலும் சரி நாம் ஒரே தொகையை முதலீடு செய்வோம். இதனால் மார்கெட் ஏற்ற இறக்கங்களில் சிக்கிக் கொள்ளாமல் அதைத் தாண்டி நமக்கு லாபம் கிடைக்கும்.
ஒழுக்கத்தை கற்றுத் தரும்
ஒவ்வொரு மாதமும் இதுபோல பணத்தை முதலீடு செய்வது நமக்குச் சேமிப்பிற்கு மிக முக்கிய பழக்கமான ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது. நீங்கள் அதிக தொகையைச் சேமிக்க ஒழுக்கம் ரொம்பவே முக்கியம். ஏதோ ஓரிரு மாதம் மட்டும் முதலீடு செய்து விட்டுவிட்டால் செல்வம் சேராது. அதேநேரம் சிப் மூலம் தானாக வங்கிக் கணக்கில் இருந்து முதலீட்டிற்குப் போவது போல நாம் போட்டுவிட்டால் சீரான ஒழுக்கமான முதலீட்டு முறையை நமக்கு ஊக்குவிக்கிறது.
அதேபோல சீராக முதலீடு செய்யும்போது மார்கெட் ஏற்ற இறக்கங்களின் தாக்கம் இதில் பெரியளவு இருக்காது. அதாவது மார்கெட் உயரும்போது அதே தொகையைப் போட்டால் குறைந்த பங்குகள் கிடைக்கும். அதேநேரம் மார்கெட் குறையும்போதும் நாம் அதே தொகையைப் போடுவோம்.. இதன் மூலம் குறைந்த ரேட்டில் அதிக பங்குகள் நமக்குக் கிடைக்கும். அதன் மூலம் சந்தையின் பலன்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
இதுதான் ரொம்ப முக்கியம்
அடுத்து முக்கியமாக காம்பவுண்டிக்கை சொல்லலாம். அதாவது சிறிய தொகையாக இருந்தாலும் அதை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் பெரிய வருமானமாக அது மாறும். இதுவே சிப் முதலீட்டின் மிகப் பெரிய சக்தி. அதாவது நீங்கள் குறைந்த தொகையைத் தான் முதலீடு செய்வீர்கள். உங்களுக்கு அந்த முதலீட்டின் சிரமமே தெரியாது. ஆனால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தால் அது மிகப் பெரிய தொகையாக மாறியிருக்கும்.
இதை ஸ்நோ பால் எபக்ட் உடனும் ஒப்பிடலாம். அதாவது பனி இருக்கும் மலையில், நீங்கள் உச்சத்தில் இருந்து ஒரு சிறிய பனி பந்தை உருட்டிவிட்டால் போதும். அது கீழே இறங்குவதற்குள் ஊரையே அழிக்கும் அளவுக்கு ஒரு மிகப் பெரிய பந்தாக மாறியிருக்கும். சிப்பும் அதுபோலத் தான். நீங்கள் சிறிய முதலீடு செய்தாலே அது கைமேல் லாபம் கொடுக்கும்.
கோடி ரூபாய் சேர்க்கலாம்
உதாரணமாக நீங்கள் மாதாமாதம் வெறும் ரூ.500ஐ முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதற்கு உங்களுக்கு 12% வட்டி கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். இதை நீங்கள் 40 வருடங்களுக்குச் செய்தால் உங்கள் முதலீடு ரூ.59.41 லட்சமாக வளர்ந்து இருக்கும். நீங்கள் போட்ட பணம் ரூ.2.4 லட்சம் தான்.. ஆனால், உங்களுக்கு கிட்டதட்ட 25 மடங்கிற்கு மேல் லாபம் கிடைக்கும்.
இதே 40 ஆண்டுகள் நீங்கள் ரூ.1000 முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு ரூ.1.18 கோடி கிடைக்கும். நீங்கள் போட்ட மொத்த பணம் ரூ.4.8 லட்சம் தான்.. ஆனால் உங்களுக்குக் கிடைக்கும் மொத்தம் ரூ.1.18 கோடி கிடைக்கும். இதுதான் சிப் முதலீட்டின் மேஜிக். இதன் காரணமாகவே பலரும் சிப் முறையில் முதலீடு செய்ய அறிவுறுத்துகிறார்கள்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications