ஆகஸ்ட் 15ம் தேதி பெட்ரோல் விலை ரூ. 2.50 ரூபாய் குறையலாம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி பெட்ரோல் விலையை சற்றுக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சுதந்திர தின விழாவினைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைக்க முடிவு செய்துள்ளன. அதேசமயம், ரூபாயின் மதிப்பு குறையும் பட்சத்தில் இதன் விலை 3 ரூபாய் அளவு வரை கூட குறையலாம்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையானது சராசரியாக 7.5 டாலராக இருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த மாதத்தில் இது இரண்டாவது விலை குறைப்பாகும். பெட்ரோல் நிறுவனங்கள் கடந்த 1 ஆம் தேதி அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 1.09 குறைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 72.51 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications