"2026ல் இதை செய்தால் கோடிகள் கொட்டும்! ஆனால்.." பெரிய வார்னிங் கொடுத்த Rich Dad Poor Dad எழுத்தாளர்
சென்னை: ரிச் டாட் புவர் டாட் எழுத்தாளரும் முதலீட்டாளருமான ராபர்ட் கியோசாகி, பணத்தைச் சேமிக்க உள்ள வழிகள் குறித்து விளக்கியுள்ளார். 2026 பணத்தைச் சேமிக்க மிகச் சிறந்த ஆண்டாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் செல்வத்தைக் குவிக்க முடியும் என்றும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டால் ஒருவர் ஏழையாவார் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
உலகளவில் அதிகளவில் விற்பனையான பொருளாதாரம் மற்றும் சேமிப்பு சார்ந்த புத்தகங்களில் ஒன்று 'ரிச் டாட் புவர் டாட்'.. ஒருவர் முதலீடு மூலம் எப்படி செல்வத்தைச் சேர்க்க முடியும் என்பதை அதில் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி விளக்கியிருப்பார். இது தமிழ் உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அதிகளவில் விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது.

ரிச் டாட் புவர் டாட் எழுத்தாளர்
இந்த ராபர்ட் கியோசாகி அமெரிக்காவில் மிகப் பெரிய முதலீட்டாளராகவும் இருக்கிறார். இதற்கிடையே கியோசாகி, 2026ல் செல்வம் சேர்க்க இருக்கும் வழிகள் குறித்து விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளக்கமாக ஒரு போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். அதில் செல்வத்தைச் சேர்க்க மிகச் சிறந்த ஆண்டாக 2026 இருக்கும் என்றும் வாழ்நாளில் இதுபோன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்றும் பதிவிட்டுள்ளார்.
தங்கம், வெள்ளி, பிட்காயின், ரியல் எஸ்டேட் மற்றும் வருவாய் ஈட்டும் தொழில்கள் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்களே இந்தாண்டு வெற்றியாளர்களாக வெளிப்படுவார்கள் என்று கியோசாகி தெரிவித்தார். மறுபுறம் பணத்தை ரொக்கமாகச் சேமிப்பவர்கள், மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள், விலைகள் குறையும் என எதிர்பார்த்துக் காத்திருப்போர், ஓய்வூதியத் திட்டங்களை நம்பியிருப்பவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக உணர்ந்தாலும் கூட அவர்கள் ஏழைகளாக மாறுவார்கள் என்று அவர் எச்சரித்தார்.
சிறப்பான வாய்ப்பு
கியோசாகி தனது பதிவில் மேலும், "2026 வெறும் நெருக்கடியாக மட்டுமே இருக்கும் எனச் சொல்லிவிட முடியாது. அது நமது வாழ்நாளின் மிக சிறந்த நிதி வாய்ப்பாக இருக்கும். பெரும்பாலானோர் 'மாற்றம்' என்ற வார்த்தையைக் கேட்டாலேயே ஆபத்து என எண்ணுகிறார்கள். நான் அதை வாய்ப்பாகவே பார்க்கிறேன்..
கடன் சுமையில் சிக்கியுள்ள உலக நாடுகள், எதிலும் குறியிடாமல் வட்டி விகிதங்களை உயர்த்த முடியாத மத்திய வங்கிகள் மற்றும் பணம் அச்சிடுவது நின்றுபோனால் சரிந்துவிடக்கூடிய ஒரு சிஸ்டம் ஆகியவை இருப்பதால் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாக 2026 இருக்கும்.. இவர்கள் எப்போதும் ஒரே விஷயத்தை தான் செய்வார்கள்.. பணத்தை அதிகளவில் அச்சிடுவார்கள்.. இதனால் பணத்தின் மதிப்பு குறைந்து பணவீக்கம் ஏற்படும். இதுபோல பணத்தின் மதிப்பு குறையும்போது ஒருவர் அதிகம் இழக்கிறார்கள். மற்றொருவர் லாபம் பார்க்கிறார்கள்.
கைமாறும் பணம்
அதாவது பணத்தைச் சேமிப்பவர்களிடம் இருந்து முதலீடு செய்வோருக்குப் பணம் செல்கிறது. ஊழியர்களிடமிருந்து உரிமையாளர்களுக்கும்.. ஒரு சிஸ்டத்தை நம்புபவர்களிடமிருந்து புரிந்து கொண்டவர்களுக்கும் செல்வம் செல்கிறது. இந்தச் சூழல் ஒருவருக்கு இரண்டு வாய்ப்பைத் தரும். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் செல்வத்தைக் குவிக்கலாம்.. அதேநேரம் முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் ஏழை ஆவீர்கள்.
சூதாட்டத்திற்குச் சமம்
இன்னொரு விஷயத்தையும் நான் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது கல்வி இல்லாமல் சொத்துகளை வாங்குவது சூதாட்டத்திற்குச் சமம். பணம் எங்கிருந்து எங்கே நகர்கிறது.. பயம் எப்படி ஒருவருக்குச் சாதகமாக வேலை செய்யும். கடனை எப்படிச் சாதகமாகப் பயன்படுத்தலாம்.. வரிகள் எப்படி உரிமையாளர்களுக்கு லாபமாக அமைகிறது.. எந்தவொரு சந்தையிலும் வருவாயை எப்படி உருவாக்குவது என்பதைப் புரிந்துகொள்வதில்தான் உண்மையான நன்மை உள்ளது" என்று அவர் தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கியோசாகியின் பதிவுகள் கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. பிட்காயின், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முதலீடுகளில் அவருடைய கருத்துகள் விவாதத்தைக் கிளப்புவதாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications