தங்கம் vs மியூச்சுவல் பண்ட்: 2020ல் ரூ.1 லட்சம் போட்டிருந்தால்.. இப்போது எவ்வளவு? வேற லெவல் லாபம்
சென்னை: 5 ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் இருந்த ரூ.1 லட்சத்தை நீங்கள் தங்கம் மற்றும் மியூச்சுவல் பண்ட்கள் என இரண்டிலும் முதலீடு செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது 5 ஆண்டுகள் கழித்து நாம் போட்ட பணம் எவ்வளவு வளர்ந்து இருக்கும்.. எதில் லாபம் அதிகம் தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியர்கள் எப்போதுமே தங்கத்தில் தான் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அனைத்துத் தரப்பினருமே தங்கத்தை தான் முதல் முதலீடாகக் கருதுவார்கள். ஆத்திர அவசரத்தில் கை கொடுக்கும் என்பதால் மக்கள் சிறுக சிறுக தங்கத்தை வாங்குவதை என்றைக்குமே விட்டதே இல்லை. பல குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாகக் கூட தங்கத்தைச் சேர்த்துள்ளனர்.

தங்கம் vs மியூச்சுவல் பண்ட்
இருப்பினும் இந்த டிஜிட்டல் யுகத்தின் நிலைமை மாறிவிட்டது. பலரும் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் நேரடியாகப் பங்குகளிலும் கூட முதலீடு செய்கிறார்கள். இன்னும் சில வல்லுநர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதே வேஸ்ட்.! பங்குகளுடன் ஒப்பிட்டால் தங்கம் பெரிய லாபம் கொடுக்காது என கூட சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சொல்லி வந்தனர். சரி இந்த இரண்டிலுமே 5 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இன்று அது எவ்வளவு லாபம் கொடுத்திருக்கும் என உங்களுக்குத் தெரியுமா?
2020ல் தான் உலகைக் கொரோனா சூழ்ந்தது. அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை அனைத்து நாடுகளுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது. அனைத்து மக்களின் மனதிலும் நிச்சயமற்ற நிலைமை உச்சத்தில் இருந்த காலம் அது. அந்த ஜனவரி 1ம் தேதி நீங்கள் 1 லட்சம் ரூபாயை தங்கம் அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால் இன்று என்னவாக இருந்திருக்கும் தெரியுமா? இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம்
2020 தொடக்கத்தில், 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் ரூ.3,920 ஆக இருந்தது. இப்போது இந்த விலையைப் படிக்கும்போது நம்புவதற்கே கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கம் இவ்வளவு குறைவாக இருந்தது என்பது தான் உண்மை. அன்றைய தினம் ரூ.1 லட்சத்தைக் கொண்டு சுமார் 25.51 கிராம் தங்கத்தை வாங்கி இருக்கலாம்.. இப்போது (டிசம்பர் 1) அதே 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு சுமார் ரூ.13,167ஆக இருக்கிறது. அதாவது இப்போது அதே 25.51 கிராம் தங்கத்தின் மதிப்பு இப்போது ரூ.3,35,890 ஆகும்.
அதாவது 5 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த ரூ.1 லட்ச ரூபாய் 3 மடங்கிற்கு மேல் அதிகரித்திருக்கும். பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் எப்போதுமே இருந்து வந்துள்ளது. இந்த முறை அத்தோடு சேர்த்து டிரம்ப் அரசியல், ரஷ்யா போர், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த குழப்பம் என பொருளாதார நிச்சயமற்ற காலங்களும் சேர்ந்துவிட்டதால் தங்கம் விலை பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது.
மியூச்சுவல் பண்ட்
மறுபுறம் அதே ரூ. 1 லட்சம் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால்.. ஆண்டுக்கு 12% லாபம் என வைத்துக் கொண்டாலும் கூட அது ரூ.2.07 லட்சமாக மட்டுமே உயர்ந்திருக்கும்.. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் லார்ஜ்-கேப், மிட்-கேப், ஸ்மால்-கேப், பேலன்ஸ்டு, ஹைப்ரிட் ஃபண்டுகள் எனப் பல வகைகளில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் லாபம் மாறுபடும். அதிகபட்ச லாபத்தை எடுத்தாலே ரூ. 2 லட்சம் மட்டுமே கிடைக்கும். அதாவது மியூச்சுவல் பண்ட் முதலீடு இரு மடங்காக மாறி இருக்கும்.
என்ன செய்வது சரி
அடடே, சூப்பர்.. அப்போ எல்லாப் பணத்தையும் தங்கத்திலேயே போட்டுவிடலாமா என்ற கேள்வி உங்களுக்கு வரும்.. ஆனால், அதுவும் பாதுகாப்பானது இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் விலை இந்தளவுக்கு ஏறியுள்ளது ஓகே.. ஆனால், அதற்கு முன்பு சில காலங்கள் பங்குச்சந்தையும் கூட நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.
பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது நாம் ஒரே நேரத்தில் பல துறைகள் மற்றும் நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்கிறோம். இதன் மூலம் அபாயம் குறையும். அதாவது எப்போதும் ஒரே விஷயத்தில் முதலீடு செய்யாமல்.. தங்கம், மியூச்சுவல் பண்ட் என பல விஷயங்களில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். பொருளாதார வல்லுநர்களும் கூட இதையே தான் வலியுறுத்துகிறார்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications