தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் முழுவேகத்தில் நடந்து வரும் வேளையில், அரசியல் கட்சிகளும், கட்சி வேட்பாளர்கள், கட்சி தொண்டர்கள் என பல தரப்பினர் தேர்தல் சார்ந்து பல்வேறு வகையில் செலவுகளை செய்து வருகின்றனர். இதன் மூலம் எப்போதும் இல்லாத வகையில் தற்போது பல தரப்பு நிறுவனங்கள் பெரிய அளவிலான வருமானத்தை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.
உதாரணமாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு, துணிக்கடை, இனிப்பு கடைகள் தான் அதிகளவிலான வர்த்தகத்தை பெறும். ஆனால் இந்த 3 பிரிவு நிறுவனங்களை தாண்டி சத்தமே இல்லாமல் போக்குவரத்து நிறுவனங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா சேவை நிறுவனங்கள், ஈகாமர்ஸ் - குவிக் கார்மஸ் தளங்கள் போன்றவை அதிகளவிலான வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெறும்.
அந்த வகையில் தேர்தல் பிரச்சாரம் மூலம் கட்சி கொடிகள், பேனர்கள், மைக்செட் - சவுண்ட் சிஸ்டம், டிராவல்ஸ் நிறுவனங்களை தாண்டி தற்போது பல தரப்பு நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருகிறது.

டிரெண்டாகும் புதிய வர்த்தகங்கள்
இன்றளவில் தேர்தல் பிரச்சார டிரெண்டுகள் பல வகையில் மாறியுள்ளது ஒருப்பக்கம் டிஜிட்டல் வாயிலாக செய்யப்படும் பிரச்சாங்கள் அதிகாரித்துள்ளது. இந்த ஆண்டு ஏஐ வீடியோ வாயிலாக பிரச்சாரங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மறுபுறம் மக்களை மக்களோடு சந்தித்தால் மட்டுமே வாக்காளர்களுக்கும் - அரசியல் தலைவர்களுக்குமான அந்த பான்டிங் உருவாகும் என்பதால் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அப்படி அரசியல் தலைவர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யும் போது பல விஷயங்கள் உள்ளே வருகிறது. கேக்குகள், டி-ஷர்ட்கள், டிசைனர் பிளவுஸ், டிரைசன் ஆடைகள், வாடகை டிரோன், வாடகை கேமரா வர்த்தகம் மற்றும் சமூக வலைதள கண்டென்ட் ஆகியவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பலதரப்பு சிறு தொழில் பிரிவில் டெய்லர்கள், பிரிண்டிங் யூனிட்கள் முதல் பெரிய ஸ்டுடியோ வரை பலரும் புதிய வருமானத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கேக் பிஸ்னஸ்
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹோம் பேக்கர் இந்து விகாசினி அதிமுக கட்சியின் முக்கிய தலைவரான எஸ் பி வேலுமணி அவர்களுக்காக மூன்று அடுக்குகளுடன் 5 கிலோ எடையுள்ள கேக் தயாரித்தது கொடுத்தார். கட்சியின் கொடி நிறங்களும் சின்னமும் இணைந்த இந்த கேக் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டதுடன், அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது ஒரு உதாரணம் மட்டுமே.
கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள், கட்சியின் முக்கிய தலைவர் தொகுதிக்கு வரும் போது, கட்சி ஆதரவாளர்கள் தலைவர்களை சந்திக்கும் போது என பல தரப்பட்ட நிகழ்வுகளில் கேக் வாங்கப்படுகிறது. இதனால் ஹோம் பேக்கர் முதல் சிறிய கேக் கடைகள், பெரிய கேக் கடைகள் என அனைத்து கடைகளில் கேக் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

பூங்கொத்து
இதோடு பூங்கொத்தும் அதிகளவில் தற்போது விற்பனையாகி வருகிறது. அரசியல் சந்திப்புகளில் தற்போது மிகவும் முக்கியமான அங்கமாக மாறி வருகிறது, இதனால் இந்தியா முழுவதிலும் இருந்து விதவிதமான பூக்கள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு வந்து அவை பூங்கொத்தாக வடிவமைத்து விற்பனையாகி வருகிறது.
டி-ஷர்ட்கள் மற்றும் எம்பிராய்டரி ஆர்டர்கள் அதிகரிப்பு
தேர்தல் காலத்தில் கட்சி லோகோ கொண்ட டி-ஷர்ட்கள் மற்றும் எம்பிராய்டரி ஆடைகளுக்கு மிகுந்த டிமாண்ட் உருவாகியுள்ளது. 10 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ள தையல் நிபுணர், ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்றதாக கூறுகிறார்.
சென்னை, திருப்பூர் மற்றும் சேலம் பகுதிகளில் இருந்து அதிகமாக ஆர்டர்கள் கிடைக்கின்றன என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர், திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளின் லோகோக்கள் கொண்ட டி-ஷர்ட்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக கூறுகின்றனர். இந்த டி-ஷர்ட்கள் ரூ.599 முதல் விற்பனை செய்யப்படுகின்றன, எம்பிராய்டரி ஆடைகள் ரூ.200 முதல் கிடைக்கின்றன.
ஆன்லைன் வர்த்தகம்
தற்போது கட்சி சார்ந்த பொருட்கள், அதாவது கட்சி சின்னம் அல்லது கட்சி தலைவர் கொண்ட பேனா, டிசரட், துண்டு, தொப்பி, கொடிகள், கீசெயின், ஸ்டிக்கர், இதர ஸ்டேஷனரி பொருட்களும் ஆன்லைனில் அதிகளவில் விற்கப்படுகிறது என பலதரப்பு ஆன்லைன் ரீடைல் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
பெண் வேட்பாளர்கள்
சென்னையை சேர்ந்த புடவை மற்றும் தையல் நிறுவனம், சமீபத்தில் செய்த தவெக தீம் கொண்ட ஆரி வேலை பிளவுஸ் டிசைன் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. இந்த வீடியோ இரண்டு வாரங்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்பு குறைந்த அளவிலேயே இருந்த ஆர்டர்கள், தற்போது தினமும் குறைந்தது 10 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம், தேர்தல் களம் காணும் அனைத்து கட்சி பெண் வேட்பாளர்கள் மக்களை சந்திக்கும் போது தனித்திருக்க இத்தகைய ஆரி வேலைப்பாடு கொண்டு பிளவுஸ், டிசைனர் புடவைகள் என பலவற்றவை வாங்கி வருகின்றனர். இந்த பிரிவும் தேர்தல் காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருகிறது.

சிறு தொழில்களுக்கு ஜாக்பாட்
கட்சிகள் பிரச்சாரங்களில் மாலைகள் அணிவிப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற நிகழ்வுகளும் இருப்பதால் அதனுடன் தொடர்புடைய சிறு தொழில்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
ஹைப்பர்-பர்சனலைசேஷன் அதாவது கட்சியின் அடையாளத்தை மேம்பட்ட காட்டும் வகையில் பொருட்களை வழங்குவது. உதாரணமாகக் கட்சி கூட்டத்திற்கு வரும் மக்களுக்குக் கட்சியின் சின்னம், தலைவரின் புகைப்படம் கொண்ட ஸ்னாக்ஸ் பேக்கொடுப்பது, தண்ணீர் பாட்டிலில் விளம்பரம் என வாய்ப்பு கிடைக்கும் அனைத்து இடத்திலும் கட்சி மற்றும் தலைவர்கள் வைத்து விளம்பரம் செய்யப்படுகிறது.
கேமரா - டிரோன் வாடகை
தற்போது அனைத்து கட்சிகளும், கட்சி உறுப்பினர்களும் சமுக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக உள்ளனர். இதனால் கன்டென்ட் கிரியேஷன் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு வேட்பாளரையும் நேரில் சந்திப்பது மிகவும் கடினம், இந்த பிரச்சனையை களைய சமுக வலைத்தளம் சிறந்த பாலமாக இருக்கிறது.
கன்டென்ட் உருவாக்கி ஆன்லைனில் பதிவிட வாடகைக்கு கேமரா - டிரோன் அளிக்கப்படும் வர்த்தகமும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பொழுதுபோக்காக டிரோன் வைத்திருப்பவர்களும் தற்போது ஸ்டுடியோ உடன் இணைந்து ட்ரோன்களை வாடகைக்கு அளித்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
மொத்தத்தில், தமிழ்நாட்டின் தேர்தல் காலம் சிறு தொழில்களுக்கு ஒரு 'பிஸினஸ் பூம்' ஆக மாறியுள்ளது. அரசியல் ஆர்வத்தை வணிக வாய்ப்பாக மாற்றும் திறன் உள்ளவர்கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். குறிப்பாக பர்சனலைசேஷன் பொருட்கள் மற்றும் சமூக வலைத்தள மார்க்கெட்டிங் இணைந்தால், சிறு தொழில்கள் மிக வேகமாக வளர முடியும் என்பது இந்த தேர்தல் காலம் தெளிவாகக் காட்டுகிறது.
-
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
46 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை.. தமிழக அரசியல் கட்சிகள் தயங்குவது ஏன்? பின்னணி -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
திருமாவுக்கு போன் போட்ட பிரேமலதா.. கடலூர் விவகாரத்தால் கொந்தளித்த விசிகவினர்.. சர்ச்சையின் பின்னணி -
"எங்கிட்ட 300 ஓட்டு இருக்கு"..விசிக வேட்பாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காங்கிரஸ் நிர்வாகி.. சர்ச்சை -
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன -
என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது! சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்! அடுத்து ட்விஸ்ட்! -
திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி?














Click it and Unblock the Notifications