இடி போல் இறங்கும் கேள்விகள்.. சந்திரசேகரன் பதவிக்கு செக் வைக்கும் டாடா குழுமம்? என்ன நடக்குது?
மும்பை: டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிர்வாகத் தலைவர் என். சந்திரசேகரனின் மூன்றாவது பதவிக்கால நீட்டிப்பு குறித்து முக்கியமான ஆலோசனை கூட்டம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது, இக்கூட்டத்தில் டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, குழுமத்தின் புதிய தொழில்களில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சுட்டிக்காட்டியது மட்டும் அல்லாமல் சந்திரசேகரனின் பதவிகாலம் நீட்டிப்பு குறித்தும் முட்டுக்கட்டை போடப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிகிறது, என்.சந்திரசேகரனுக்கு அடுத்தடுத்து இடி போல் கேள்விகள் இறங்கி வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், தனது புதிய வணிக முயற்சிகளில் எதிர்பாராத அளவில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இப்பிரிவில் துவங்கப்பட்ட வர்த்தகம் அனைத்தும் நீண்ட கால அடிப்படையில் வளரும் வாய்ப்பை கொண்டிருக்கும் காரணத்தால் தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டம் டாடா குழுமத்தின் உயர்மட்ட குழுவில் பெரும் கேள்வியாக வெடித்துள்ளது.
2026ஆம் நிதியாண்டில், டாடா குழுமத்தின் புதிய முயற்சிகள் அதாவது புதிதாக துவங்கப்பட்ட வர்த்தகங்கள் மொத்தமாக ரூ.29,000 கோடி வரை நஷ்டத்தை பதிவு செய்யக்கூடும் என உள் நிர்வாக மதிப்பீடுகள் அடிப்படையில் டைம்ஸ் அறிக்கையில் கணிக்கப்பட்டு உள்ளது. 2026ஆம் நிதியாண்டில் ரூ.5,700 கோடி அளவிலான நஷ்டத்தை மட்டுமே சந்திக்கும் என முன்பு கணிக்கப்பட்டதை விட பல மடங்கு நஷ்டத்தின் அளவு அதிகரித்துள்ளது டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
2026ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே புது வர்த்தக பிரிவின் நஷ்டம் 21,700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2025ஆம் நிதியாண்டில் முழுவதும் பதிவான ரூ.16,550 கோடி நஷ்டத்தை விட அதிகமாக இருப்பது, நிறுவனத்தின் புதிய முதலீடுகள் எதிர்பார்த்த வருமானத்தை உருவாக்க முடியாமல் போயுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்த நஷ்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் ஏர் இந்தியா, டாடா டிஜிட்டல், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தேஜஸ் நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளது.
சந்திரசேகரனுக்கு நெருக்கடி
இந்த அதிகரிக்கும் நஷ்டம் டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் என். சந்திரசேகரனுக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது. குறிப்பாக, அவரது மூன்றாவது பதவி காலம் நீட்டிப்பு குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய காலக்கட்டத்தில் டாடா டிரஸ்ட் அமைப்பு இருக்கும் காரணத்தால், இந்த அதீத நஷ்டத்திற்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. பிப்ரவரி மாத நிர்வாக கூட்டத்தில் பதவிகால நீட்டிப்பு தாமதிக்கப்பட்டது.
நஷ்டத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து நோயல் டாடா கவலை தெரிவித்துள்ளதாக பிப்ரவரி மாதம் கூறப்பட்டது. நஷ்டத்தை கட்டுப்படுத்தும் தெளிவான திட்டத்தை சந்திரசேகரன் ஜூன் மாதத்தில் சமர்ப்பிக்க உள்ளார். இந்த நிலையில் இன்று ஏர் இந்தியா சிஇஓ கேம்ப்மெல் வில்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டாடா குழுமம் என்.சந்திரசேகரன் தலைமையில் நீண்டகால வளர்ச்சிக்காக புதிய துறைகளில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. ஆனால், அந்த முதலீடுகள் உடனடி வருமானத்தை உருவாக்காததால், குறுகியகால நிதி அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதை சரியான முறையில் நிர்வகிப்பதே தற்போது டாடா குழுமத்தின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
டாடா டிஜிட்டல்
2019ல் தொடங்கப்பட்ட டாடா டிஜிட்டல், இக்குழுமத்தின் முக்கிய டிஜிட்டல் முயற்சியாக கருதப்படுகிறது. இதில் டாடா நியூ போன்ற தளங்கள், மேலும் டிஜிட்டல் வர்த்தகங்களான பிக் பேஸ்கட், டாடா 1mg, க்ரோமா, டாடா கிளிக், ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த அமைப்பு, ரூ.24,000 கோடிக்கு மேல் முதலீடு பெற்றிருந்தாலும் இன்னும் லாபகரமாக மாறவில்லை.
2026ஆம் நிதியாண்டில் இல் மட்டும் ரூ.5,000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 9 மாதங்களில் ரூ.3,750 கோடியைத் தாண்டிய நஷ்டம் ஏற்கனவே பதிவாகியுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம்
டாடா எலக்ட்ரானிக்ஸ் 2026ஆம் நிதியாண்டில் ரூ.3,000 கோடி நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளதாக டைம்ஸ் ரிப்போர்ட் கூறுகிறது. அதேசமயம், Tejas Networks கடந்த ஆண்டு ரூ.500 கோடி லாபத்தில் இருந்தபோதும், இப்போது ரூ.1,000 கோடி நஷ்டத்திற்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா
இந்த அனைத்து நிறுவனங்களிலும், ஏர் இந்தியா தான் மிகப்பெரிய நிதி சுமையை உருவாக்கியுள்ளது. 2026ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.20,000 கோடி நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.15,000 கோடி முதல் 9 மாதங்களிலேயே பதிவாகியுள்ளது. 2025ஆம் நிதியாண்டில் இது ரூ.11,000 கோடி இருந்தது. 2026ஆம் நிதியாண்டில் நஷ்டத்தின் அளவு 2000 கோடி ரூபாயாக குறைக்கப்படும் என கணிக்கப்பட்ட நிலையில் 20000 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
ஜூன் மாதம் என். சந்திரசேகரன் இந்த 30000 கோடி ரூபாய் நஷ்டத்தை எப்படி சமாளித்து லாப நிலைக்கு செல்லப்போகிறது என்பதை விளக்கும் திட்டத்தின் அடிப்படையில் தான் 3வது முறை டாடா சன்ஸ் தலைவர் பதவி நீட்டிக்கப்படும்.
-
ஏர் இந்தியா சிஇஓ திடீர் ராஜினாமா.. என்ன காரணம்? டாடா சன்ஸ் சந்திரசேகரனுக்கு அடுத்தடுத்து பிரச்சனை -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு!
















Click it and Unblock the Notifications