சமையல் எரிவாயு மானியத்துக்கு வருமான வரி? அச்சத்தில் மக்கள்
டெல்லி: மத்திய அரசின் புதிய சட்டத்தால், எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறும் பயனாளிகள், வருமான வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
லோக்சபாவில் கடந்த வாரம் 2015ம் ஆண்டு நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது; அதில், 1961ம் ஆண்டு, வருமான வரிச் சட்டத்தின் கீழ், துணை பிரிவு சேர்க்கப்பட்டு, வருவாய்க்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி மானியங்கள், நிதியுதவி, ரொக்க ஊக்கத்தொகை, செலுத்திய வரியை திரும்ப பெறும் சலுகையில் பெறும் தொகை ஆகியவை, வருவாய் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், நேரடி மானிய திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் பெறுவோரும், தாங்கள் பெறும் மானியத்திற்காக வருமான வரி செலுத்த நேரிடும்.

சமையல் எரிவாயு மானியம்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் மானியத்தை செலுத்தும் திட்டம், கடந்த ஜனவரி 1ஆம்தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஒரு வாடிக்கையாளர், ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்கிக் கொள்ளலாம். அவருக்கு சந்தை விலையில் சிலிண்டர் அளிக்கப்படும். சந்தை விலைக்கும், மானிய விலைக்கும் இடையிலான வித்தியாச தொகை, அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

மாறுதலுக்கு உட்பட்டது
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருவதால், வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் மானியத்தொகையும் அதற்கேற்ப மாறி வருகிறது. நடப்பு மே மாதத்தில், இந்த மானியத்தொகை ரூ.198.18 ஆக உள்ளது.

ரூ.1200 மானியம்
இதை சராசரியாக ரூ.200 என்று வைத்துக் கொண்டாலும் ஒரு பயனாளி, ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வாங்கினால், அவர் வங்கி மூலம் மானியமாக ஆண்டுக்கு ரூ.2,400 பெறுவார். அவர் 30 சதவீத வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ளவராக இருந்தால், அவர் இந்த மானியத்தொகைக்கு வருமான வரியாக ரூ.720 செலுத்த வேண்டி இருக்கும். எனவே, இந்த மானியத்தொகைக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது பற்றி மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு விளக்கம் தருமா?
அதேசமயம், இது வருமான வரி விலக்கு வரம்பான, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கே பொருந்தும். எனினும், மசோதாவில் சேர்க்கப்பட்ட, 'மானிய வருவாய்' என்ற சொற்றொடருக்கு, அரசு விளக்கம் அளித்தால் மட்டுமே, இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் என, வருமான வரித் துறை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications