23460 ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்த TCS சிஇஓ-க்கு கிருதிவாசன்-க்கு 28.1 கோடி ரூபாயம் சம்பளம்..!
தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2026ஆம் நிதியாண்டில் 23,460 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதன் வரலாற்றில் மிகப்பெரிய ஊழியர்கள் வெளியேற்றத்தை செய்த நிலையில் இந்நிறுவனத்தின் சிஇஓ-க்கான சம்பளத்தை அறிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் கே.கிருதிவாசன், 2026ஆம் நிதியாண்டில் மொத்தம் 28.1 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது முந்தைய நிதியாண்டை விட 6 சதவீதம் அதிகமாகும்.

கிருதிவாசன் பெற்ற 28.1 கோடி ரூபாய் சம்பளத்தில் 1.67 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், 1.43 கோடி ரூபாய் பலன்கள், சலுகைகள் மற்றும் படிகளாகவும், 25 கோடி ரூபாய் கமிஷனாகவும் பெற்றுள்ளார். இந்த சம்பளம் டிசிஎஸ் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட 332.8 மடங்கு அதிகமாகும்.
டிசிஎஸ் நிறுவனம் 2026 நிதியாண்டு இறுதியில் 5,84,519 ஊழியர்களுடன் இயங்கிய நிலையில் முந்தைய நிதியாண்டில் இது 6,07,979 ஊழியர்களுடன் இயங்கி வந்தது. இதன் மூலம் ஒரு வருடத்தில் 23,460 ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இந்த பணிநீக்கம் ஐடி துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல ஊழியர்கள் தங்கள் வேலை பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
நிறுவனத்தின் விளக்கம்
டிசிஎஸ் நிறுவனம் தனது வருடாந்திர அறிக்கையில், சிஇஓ-வின் சம்பள உயர்வு, நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஏற்பவே இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிசிஎஸ்-ன் இளநிலை மற்றும் நடுத்தர ஊழியர்கள் ஆண்டுக்கு 4.5 முதல் 7 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட இதே அளவிலான சம்பள உயர்வை தான் சிஇஓ கிருதிவாசனும் பெற்றுள்ளார்.
இதேவேளையில் டிசிஎஸ் நிறுவனத்தில் சிறப்பாக செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே உள்ள ஊழியர்களுக்கு 1 முதல் 6 சதவீதம் வரை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் variable pay நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் தனிப்பட்ட செயல்திறனுடன் இணைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
தலைமை செயல் அதிகாரி சம்பளம்
இதேவேளையில் டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி ஆர்த்தி சுப்ரமணியன் 2026 நிதியாண்டில் மொத்தம் 18.3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். இதில் 1.5 கோடி அடிப்படை சம்பளமாகவும், 1.83 கோடி பலன்கள் மற்றும் படிகளாகவும், 15 கோடி கமிஷனாகவும் அமைந்துள்ளது.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications