உலகின் திறமையான அரசு உள்ள நாடு எது தெரியுமா?: நிச்சயமா அது...
கத்தார்: உலகிலேயே மிகவும் திறமையான அரசு என்றால் அது கத்தார் அரசு தான் என்று உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார மன்றம் உலகின் 144 நாடுகளின் அரசுகளை கண்காணித்து அதில் எந்தெந்த நாடுகளின் அரசுகள் மிகவும் திறமையானவை என்பதை ஆய்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கத்தார் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அந்த பட்டியலின் விவரம் வருமாறு,

கத்தார்
உலக பொருளாதார மன்றத்தின் பட்டியலின்படி உலகிலேயே கத்தார் அரசு தான் மிகவும் திறமையானது. வியாபார ஒழுங்குமுறை, ஒளிவுமறைவற்ற அரசு கொள்கைள் உள்ளிட்டவற்றை வைத்து திறமையான அரசுகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து போட்டி
2022ம் ஆண்டு உலகக் கால்பந்தாட்டப் போட்டிகள் கத்தாரில் நடக்க உள்ளது. கத்தார் அரசு தில்லமுல்லு வேலை செய்து அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இந்த வாய்ப்பை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் கத்தார் அரசு தாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.

பெண்கள்
ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி கடந்த 2013ம் ஆண்டு கத்தாரின் மன்னர் ஆனார். கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடப்பதாகவும் பொதுமன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. கத்தாரில் பேச்சுரிமை கட்டுப்படுத்தப்படுகிறது. ஊடகங்களால் சுதந்திரமாக செய்தி வெளியிட முடியவில்லை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்
உலகின் திறமையான அரசுகள் பட்டியலில் கத்தாரை அடுத்து சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூரை அடுத்து பின்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

முதல் 10
உலகின் திறமையான அரசுகள் பட்டியலில் 7வது இடத்தில் ருவாண்டாவும், 8வது இடத்தில் மலேசியாவும், 9வது இடத்தில் சுவிட்சர்லாந்தும், 10வது இடத்தில் லக்சம்பர்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications