• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊரு ஊரா போய் சுவைக்காம ஒரே கிளிக்ல சுவைக்கலாம் வாங்க ! ! !...

By Siva

வணக்கம்ங்க! நீங்க எல்லாரும் இந்த திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு இருப்பீங்கன்னு நம்புறோம். நல்ல தரமான சம்பா கோதுமையை எடுத்து, ஒரு 8 மணி நேரம் பதமா ஊறவைச்சு, பக்குவமா ஆட்டு உரல்ல போட்டு ஆட்டுனோமுன்னா, கோதுமைப்பால் பொங்கி வரும். அந்த கோதுமைப் பாலை வாணலியில் போட்டு கொதிக்க வைக்கணும், பின் சர்க்கரைப் போட்டு விடாம கிண்டிகிட்டே இருந்தால் அல்வா சிவப்பு நிறமா வரும், அப்போ தேவையான அளவு நெய் சேர்த்து கிளறி, வறுத்த முந்திரியை மழைச் சாரலா தூவி விட்டோம்னா, எலேய் திருநெல்வேலி அல்வா ரெடி லேய்!

Traditional snacks just a click away

இதோட ருசியை வார்த்தையால வர்ணிக்கவே முடியாது! அதையெல்லாம் அனுபவிக்கனும். கம கமன்னு மணக்குற கால் கிலோ அல்வாவை கையில வச்சுக்கிட்டு, ஆள்காட்டி விரல், நடு விரல் இரண்டையும் தள தளன்னு நெய்யில மிதக்குற அல்வாவுல விட்டு, கொஞ்சமா எடுத்து அலேக்கா வாயில போட்டு கண்ணை மூடி சுவைச்சீங்கன்னா, அடடா அடடா, சொர்க்கம் சுவையிலே!

இதைப்பத்தி எடுத்துச்சொல்லும்போதே, உங்களுக்கு நெல்லை அல்வா திங்கணும்னு நிச்சயமா ஆசை கிளம்பியிருக்கும், கிளம்பணும்! அப்போ என்ன செய்வீங்க, ப்ளைட் பிடிச்சு திருநெல்வேலிக்கு போகமுடியுமா? அதுக்குதான் www.tredyfoods.com வேணும்ங்கிறது. சுவையான திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய்... இப்படி நம்ம தமிழ்நாட்டோட ஒவ்வொரு ஊருக்கும் அடையாளமான தனி ருசி கொண்ட தின் பண்டங்களை ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்கக்கூடிய வாய்ப்பைக் கொடுக்குது.

Traditional snacks just a click away

ஊட்டி வருக்கி, உடுமலைப்பேட்டை வட்ட முறுக்கு, செட்டிநாட்டு தேன்குழல், தூத்துக்குடி மேக்ரூன்ஸ், அட பழனி பஞ்சாமிர்தம் வரைக்கும் ஒன்னு விடாம ரவுண்டு கட்டி ​​கொடுக்குது இந்த வெப்சைட். பாரம்பரிய இனிப்பு மற்றும் காரங்கள், ஊட்டி ஹேன்ட்மேட் சாக்லேட், கேக், பிஸ்கட், அப்பளம் & வத்தல், ஊறுகாய், ரெடிமேட் மிக்ஸ், ஆர்கானிக் ஐட்டங்கள், சூப் கலவைகள், ஆரோக்கிய பானங்கள், மூலிகைகள், இப்படி நமக்குத் தேவையான அம்புட்டு பதார்த்தங்களையும் பார்த்து பார்த்து தர்றாங்க இந்த www.tredyfoods.com​.

Traditional snacks just a click away

இடித்த நிலக்கடலை உருண்டையின் சுவையோ அலாதியானது​.​ மேலும், இதுல இரும்புச் சத்து இயற்கையாவே நிறைஞ்சு இருக்கு. நிலக்கடலைப் பருப்பு, சுத்தமான நாட்டு சக்கரை, சுக்கு மற்றும் ஏலக்காய் சேர்க்கப்பட்டு செய்யிறதால, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் போன்ற அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவா இது அமையுது. குழந்தைகளுக்கு ஸ்நாக் பாக்ஸில் பிஸ்கட், சிப்ஸ் போன்ற 'ஜங்க் ஃபுட்'களைக் கொடுப்பதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவு முறையின் அங்கமான இதுபோன்ற நிலக்கடலை உருண்டையை தினமும் கொடுப்பதன் மூலம் அவர்களது அரோக்கியம் மேம்பட்டு சுறுசுறுப்பா இருப்பாங்க...​

Traditional snacks just a click away

ஆரோக்கியத்துக்கு முக்கியம் நம் மரபு சார்ந்த இயற்கை உணவுகள்தான், ஆனா இன்னைக்கு இது சுலபமா கிடைக்குதாங்குறது ஒரு கேள்விக்குறி. tredyfoods.com-ல் மூட்டு வலியைப் போக்கும் ஆட்டுக்கால் கிழங்கு, உடலைத் தேற்றும் பிரண்டை சூப் பொடி, மலை வாழைப்பழம், சிறுதானியங்கள் போன்ற ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பல பொருள்களும் கிடைப்பது ரொம்ப நல்ல விஷயம்!

இந்தியாவுல எங்க இருந்தும் ஆர்டர் செய்தாலும், அருமையான பேக்கிங்கில் நாம கேட்ட பண்டங்கள் டெலிவர் செய்யப்படுது. வெறும் 300 ரூபாய்க்கு மேல ஆர்டர் பண்ணாலே, இலவச டெலிவரியும் கிடைக்குது! இன்னொரு சூப்பர் மேட்டர் என்னன்னா இந்தியா மட்டுமில்லாம யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகள்ல இருந்தும் ஆர்டர் செய்யலாம்!

ஊர் ஊரா சுத்தி, அந்தந்த இடங்களின் தனி அடையாளமா விளங்கும் சுவையான பலகாரங்களை வாங்கி சுவைப்பதெல்லாம் பழைய ஸ்டைல்! அசத்தல் தரத்தில், அருமையான சுவையில் கிடைக்கும் பதார்த்தங்களை ஒருமுறை www.tredyfoods.com -க்குப் போய் வாங்கிப்பாருங்க, வாங்கிக்கிட்டே இருப்பீங்க!

 
 
 
English summary
Traditional snacks are very healthy and it is easily available. Thanks to www.tredyfoods.com, all traditional snacks are just a click away.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more