Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பாரம்பரிய தின்பண்டங்கள் ஆன்லைனில் வாங்க, இங்கே வாங்க!

தமிழக பாரம்பரிய உணவுகளை சுவைக்க டெடிபுட்ஸ் வெப்சைட் மூலம் ஆன்லைனில் வாங்கி சாப்பிடுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 70, 80 களில் பிறந்தவர்கள் பள்ளிக்கு செல்லும் போது டவுசர் பாக்கெட்டுகளிலும், சட்டை பாக்கெட்டுகளிலும் சின்னச் சின்ன மிட்டாய்களே இடம் பிடித்திருக்கும். பள்ளி இடைவேளை நேரங்களில் நண்பர்களுடன் தேன்மிட்டாய், கமர்கட், கயிறு மிட்டாய், எள்ளுரண்டை, கடலை மிட்டாய், கொக்கொ மிட்டாய், மாங்காய் போன்றவற்றை காக்கா கடி கடித்து அதை பலரோடு பகிர்ந்து உண்பதே அலாதியான சுகம் என்பதை மறுக்கமுடியாது.

என்னதான் சூப்பர் மார்க்கெட் போய் கார்டுகளை தேய்த்து விதம் விதமாய் மிட்டாய் மற்றும் பழவகைகளை வாங்கினாலும் 20 நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு பள்ளிக்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் மிட்டாய்கள், மாங்காய், நெல்லிக்காய் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டது நினைவில் வந்து செல்லும். அவர்களின் மலரும் நினைவுகளை பசுமையாக வைத்திருக்கவே tredyfoods.com பாரம்பரியம் மிக்க மிட்டாய்களை விற்பனை செய்கின்றனர்.

தேன் மிட்டாய்:

சிகப்பு மற்றும் ஆரஞ்சு கலரில் கண்ணைக்கவரும் தேன் மிட்டாயை தொடும் போதே ஆவல் அதிகரிக்கும். மென்மையாக கடித்து சுவைத்தால் நாவில் இனிக்கும் சர்க்கரை பாகு தேன் மிட்டாயை மீண்டும் மீண்டும் ருசிக்கத் தூண்டும். எத்தனை மிட்டாய்களை சாப்பிட்டாலும் திருப்தி படாத தேன் மிட்டாய் பிரியர்களுக்காகவே www.tredyfoods.comமில் விற்பனை செய்கின்றனர். ஒரு டச் போதும் மிட்டாய் உங்கள் வீடு தேடி பத்திரமாக வரும்.

கமர்கட்:

கமர்கட் மிட்டாய் நினைக்கும் போதே அதன் சுவை பள்ளி பருவத்திற்கு கொண்டு செல்லும். காக்கா கடி அதிகம் கடிப்பது இந்த கமர்கட்டுக்காகத்தான். இது தேங்காயின் மணத்தோடு பாரம்பரியம் மாறாமல் இருக்கிறது. சுவையானதோடு சத்தானதும் என்பதால் இன்றைக்கு பள்ளி செல்லும் பிள்ளைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸ்சில் அவசியம் இடம் பெறவேண்டும்.

Tredyfoods provides Tamilnadu native foods via online

கயிறு மிட்டாய்:

கயிறு மிட்டாய் பற்றி நினைக்கும் பொழுதே நம் குழந்தை பருவம் நினைவுக்கு வரும். மிட்டாயின் கண்கவர் நிறம் நம்மை சுண்டி இழுக்கும். கயிறு மிட்டாயை இரு கைகளின் ஆல்காட்டி விரல்களில் மாட்டி இழுக்கும் பொழுது வரும் சத்தம் அலாதியானது. இந்த கயிறு மிட்டாயை சுவைப்பதை காட்டிலும் இதில் விளையாடுவதில்தான் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம்.

கடலை மிட்டாய்:

நிலக்கடலை, வெல்லத்தில் உள்ள சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த காலத்தில் இரண்டையும் இணைத்து மிட்டாய் ஆக மாற்றி கொடுத்தார்கள். கடலை மிட்டாயை கடித்து சுவைக்கும் போது வெல்லத்தின் சுவை அடித்தொண்டையில் மெதுவாக இறங்கும். வறுத்த நிலக்கடலையின் ருசி மொறு மொறுப்பாய் பற்களில் அரைபடும். கடலை மிட்டாய்க்கு ஸ்பெஷல் கோவில்பட்டிதான். வெல்லம் கடலை மிட்டாய் ஒரு பக்கம் ருசித்தால் கருப்பட்டி கடலை மிட்டாயும் போட்டிக்கு நிற்கிறது. கடலை மிட்டாயை ருசிக்க வேண்டுமென ஆசைப்படுபவர்கள் ஆன்லைனில் www.tredyfoods.com மில் ஆர்டர் செய்யலாம்.

Tredyfoods provides Tamilnadu native foods via online

ஸ்னாக்ஸ் பாக்ஸ் ஸ்பெஷல்:

இன்றைக்கு லஞ்ச் பாக்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸ்சில் விலை உயர்ந்த சாக்லேட்கள், பிஸ்கெட்கள், கெமிக்கல் கலந்த பழ வகைகளே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.

நாம் சாப்பிடும் உணவு சக்கையாக இருக்கக் கூடாது சத்தானதாக இருக்க வேண்டும். அந்த வகையில்" பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்னாக்ஸ் வகைகளான கடலை உருண்டை, முந்திரி உருண்டை, பாதாம் உருண்டை, எள்ளு உருண்டை, பாசிப்பயிறு உருண்டை, ஆகிய அனைத்தும் கிடைக்கிறது. தினமும் ஒரு வைகை உருண்டையை குழந்தைகளின் ஸ்னாக்ஸ் பாக்ஸில் போட்டு அனுப்பலாம். வெல்லம் மற்றும் கருப்பட்டி சேர்த்து செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

பாரம்பரிய இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள்:

மேலும் tredyfoods.com இல் பாரம்பரிய இரும்பு மற்றும் பித்தளை சமையல் பாத்திரங்களை பிரத்தியேகமாக விற்பனை செய்கின்றனர்.

இரும்பு, பித்தளையில் செய்த பாத்திரங்களையே தமிழக மக்கள் பாரம்பரியமாக உபயோகித்து வந்தனர். கால மாற்றத்தினால் நான்ஸ்டிக் எனப்படும் பிசுபிசுப்பில்லாத பாத்திரங்களுக்கு மாறினர். பாரம்பரியத்தை விரும்பும் மக்களுக்காகவே www.tredyfoods.com இல் பித்தளையில் செய்யப்பட்ட காபி ஃபில்டர், பித்தளை காபி டபரா செட் இரும்பு தோசைக்கல், பணியாரச்சட்டி, கடாய், காரட் துருவி, தேங்காய் துருவியுடன் கூடிய இரும்பு அரிவாள் மனை, பாரம்பரிய தேங்காய் துருவி, முறுக்கு அச்சு, பூரிக்கட்டை, பருப்பு கடையும் மத்து என பாரம்பரிய வீட்டு உபயோகப்பொருட்களும் இந்த இணைய தளத்தில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

Tredyfoods provides Tamilnadu native foods via online

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் ஒரேயிடத்தில்:

இது மட்டுமல்ல "நவதானிய குக்கீஸ்கள்", " சிறுதானிய குக்கீஸ்கள்" "நவதானிய ரஸ்க்குகள்", "சத்தான எள்ளு மிட்டாய்", மொறுப்பான "சாத்தூர் சேவு", தித்திக்கும் "ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா", "திருநெல்வேலி அல்வா", "மலைவாழைப்பழம்", "ஆட்டுக்கால் கிழங்கு", "ஊட்டிஹோம் மேட் சாக்லேட்ஸ்", "ஆர்கானிக் சூப்" "வற்றல் வகைகள்" "ரெடிமிக்ஸ் சமையல் பொடிகள்" "மூலிகை பொடிகள்","நன்னாரி சர்பத்"என 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் www.tredyfoods.com இல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம். ஒருமுறை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க... அப்புறம் அதன் சுவையைப் பற்றியும் Tredyfoods.com பத்தியும் ருசிக்க ருசிக்க நீங்களே பேசுவீங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+