"டிரம்பால் வந்த குழப்பம்.. தங்கம் விலை பறக்க ஆரம்பிக்கும்!" மிக பெரிய இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சீராகவே இருந்து வருகிறது. தங்கம் விலை வரும் காலத்தில் குறையுமா இல்லை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்குமா என்ற கேள்வி மக்களிடையே தொடர்ந்து இருந்தது. இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து மிக முக்கியமான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சீராக இருந்து வருகிறது. பெரியளவில் ஏற்றம் இல்லை என்றாலும் ஓரளவுக்குத் தங்கம் விலை கணிசமாக அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 72,160க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தான் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.72,600க்கு விற்பனையானது. இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்த தங்கம் ரூ.73,120க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு கிராம் ரூ.9,140க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆபரணத் தங்கம்
அதாவது ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9075க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இதேபோலத் தான் பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்குமா.. இல்லை சீக்கிரம் உயர ஆரம்பித்துவிடுமா என்ற கேள்வியே இப்போது மக்களிடையே இருக்கிறது. இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "டிரம்ப் ஒவ்வொரு நாடுகளுக்கும் வரி விதித்து வருகிறார். எல்லா நாடுகளுக்கும் அவர் வரி விதித்து வருகிறார். இலங்கைக்குக் கூட 30% வரியை அவர் விதித்துள்ளார். எனவே, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வரி விதித்து வருகிறார். இந்த வரியை ஆக. 1ம் தேதி அமல்படுத்துவாரா இல்லை திரும்பத் தள்ளி வைப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மிகப் பெரிய குழப்பம்
பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் 10% வரி விதித்து இருக்கிறார். இதில் இந்தியாவுக்கும் 10% வரி வருகிறது. இப்போது காப்பாருக்கு 50 வரி விதிப்பேன் என்கிறார். ஏற்கனவே, ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்குப் போட்ட 25% வரி தனி என்கிறார். எனவே, ஒரு நாட்டிற்கு வரி விதிக்கிறார் என்றால் அத்துடன் இந்த வரியும் சேர்ந்து கொள்ளும். ஆனால் மறுபுறம் ஆட்டோமொபைலில் ஜப்பானுக்கு 25% மட்டும் தான் வரி.. மீத ஜப்பான் பொருட்களுக்கு வரி இல்லை என்கிறார். ஆக மொத்தம் பெரிய குழப்பம் தான். இதெல்லாம் எங்குப் போகும் எனத் தெரியவில்லை.
இந்தக் குழப்பம் மார்கெட்டை நிச்சயம் பாதிக்கும். இன்றைக்குப் பண்ணவில்லை என்றாலும் நாளை பண்ணும். ஏனென்றால் பொருளாதாரம் என்பது சயின்ஸ் இல்லை உடனே பாதிப்புகளைக் காட்டாது.! இவை மெல்லத் தான் தெரியும். அடுத்தாண்டு இதே நேரம் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் நமக்குத் தெளிவாகப் புரிந்து இருக்கும்.
தங்கம் விலை உயருமா?
டிரம்ப் இதைச் செய்தால் தங்கம் விலை அதிகரிக்கும். ஏற்கனவே பிட்காயின் விலை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலையும் பின்னாடியே வரும். இவை எல்லாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. வருவாய் பற்றாக்குறை குறைந்து கொண்டே இருக்கிறது. எந்தவொரு முதலீட்டுச் சொத்தை எடுத்து ஒப்பீட்டு பார்த்தாலும் டாலர் மதிப்பு குறைந்து கொண்டே போவது தெளிவாகத் தெரிகிறது.
சீனா, ரஷ்யா, துருக்கி!
டாலர் மதிப்பு உயர்வதால் தங்கம் விலை சில நாட்களாக உயர்ந்துள்ளது. இப்போது ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.9000 முதல் 9200 என்ற ரேஞ்சுக்குள் தான் இருக்கிறது. அதேநேரம் சீனா, ரஷ்யா, துருக்கி வாங்கத் தயாராக இருப்பதால் தங்கம் விலை பெரியளவில் சரியாது. எனவே, நமக்குக் கவலை தேவையில்லை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications