இரவோடு இரவாக அமெரிக்கா எடுத்த முடிவு.. தங்க மார்கெட்டில் நாளையில் இருந்து தான் ஆட்டமே இருக்கு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்ற வேண்டாம் என்று அமெரிக்கா முடிவு எடுத்தது. இந்த முடிவைத் தொடர்ந்து சர்வதேச அளவில் தங்க மார்கெட்டில் பெரியளவில் சரிவு இல்லை. அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவுக்கும் தங்கத்திற்கும் என்ன தொடர்பு.. வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

அமெரிக்க பெடரல் வங்கி தனது பாலிசியை முடிவு செய்ய அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தும். அதன்படி நேற்று நடந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற முடிவை அமெரிக்க பெடரல் வங்கி எடுத்தது. இத்தோடு சேர்த்து மூன்றாவது முறையாக அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்ற வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளது. இது எதிர்பார்த்த ஒரு முடிவு தான் என்றாலும் பெடரல் வங்கி குழுவில் மிகப் பெரிய கருத்து வேறுபாடுகள் நிலவுவதும் தெளிவாகத் தெரிகிறது.

US Federal Reserve US Gold

வட்டி விகிதம்

வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் குழுவில் 8-4 என்ற கணக்கில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் இந்தளவுக்குக் கருத்து வேறுபாடு நிலவுவது 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.! வட்டி விகிதம் நிலையாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு எதிராக வாக்களித்தவர்களில் மூன்று பேர் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ஒருவர் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தங்கம் சரியவில்லை

இருப்பினும், பெரும்பான்மை அடிப்படையில் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. வட்டி விகிதம் 3.50% முதல் 3.75% வரை மாற்றமின்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டது. வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பு வந்தவுடன் தங்கம் விலை சுமார் 50 டாலர் வரை சரிந்தாலும் பிறகு மீண்டும் ஏறிவிட்டது. இப்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லை. இந்தியாவிலும் அதே நிலை தான் தொடர்கிறது. அமெரிக்காவின் கூட்டத்திற்குப் பிறகு தங்கம் விலை சரியும் எனப் பலரும் நினைத்த நிலையில், அதற்கு நேர்மாறாகவே முடிவுகள் அமைந்துள்ளது.

காரணம்

அதற்கு சில காரணங்களும் உள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் காரணமாக, பாதுகாப்பான முதலீடாகத் (தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $120ஐ நெருங்கியுள்ளதால், நீண்ட காலப் பணவீக்கம் குறித்த அச்சம் எழுந்துள்ளது. பணவீக்கத்திற்கு எதிரான ஒரு கவசமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை நாடுகின்றனர்.

பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து பெருமளவில் தங்கத்தை வாங்கி வருவது, இதனால் தங்கம் விலை பெரியளவில் சரிவது இல்லை. ஃபெடரல் வங்கியின் கூட்டத்திற்குப் பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று குறைந்ததால், தங்கம் விலை ஏறவும் இல்லை.

அடுத்து என்ன

தற்போதைய சூழலில் வட்டி விகிதம் உயர்த்தப்படாதது, எதிர்காலத்தில் வட்டி குறைக்கப்படலாம் என்ற நம்பிக்கையைச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கூட்டத்தில் டிரம்ப் நியமித்த வார்ஷ் தான் பெடரல் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார். எனவே, அவர் நிச்சயம் வட்டி குறைப்பைச் செய்வார் என்பதே முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதுவும் தங்கம் விலை குறையாமல் இருக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கி முடிவு வந்துவிட்ட நிலையில், அமெரிக்கா ஈரான் விவகாரம் என்னவாகும் என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.! அதைப் பொறுத்தே தங்கம் விலையில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+