விஜய் பக்கத்துவீட்டுக்காரர் சோகத்திலும் சோகம்.. நமக்கு மட்டும் ஏன் இப்படி? -சுத்திசுத்தி அடிக்குதே!
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் ஆவார். சென்னை நீலாங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் காலனியில் விஜய்யின் வீடும், பிஆர் சுந்தரின் வீடும் ஓரே அப்பார்ட்மென்ட்ல் அமைந்துள்ளன.
பி.ஆர்.சுந்தர் தனது ட்விட்டர் பதிவில் இந்திய பங்குச் சந்தை குறித்து முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இந்திய சந்தையில் எப்போதும் இல்லாமல் பல எதிர்மறையான விஷயங்கள் ஒரே நேரத்தில் தாக்கும் மிகவும் அரிதான சூழல் உருவாகியுள்ளது என்று எச்சரித்துள்ளார். மேலும் இந்த நிலைமை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்து வருகிறது. இது வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) தங்கள் பணத்தை இந்தியாவில் இருந்து திரும்பப் பெறுவதைக் குறிக்கிறது. இதனால் இறக்குமதி செலவுகள், குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது.
இந்த இரட்டை பாதிப்பு பங்குச்சந்தையில் பெரும் வார்னிங் கொடுத்துள்ளது. FIIக்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இழப்பை சந்திக்கும் போது அதிகப்படியான பங்குகளை விற்கத் தொடங்குகின்றனர். இதனால் பணவீக்க அபாயமும் அதிகரிக்கிறது.
FII மற்றும் DII இருவரும் விற்பனை
பொதுவாக சந்தை வீழ்ச்சியடையும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) விற்றாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் (DII) வாங்கி சந்தையை தாங்கி நிற்பார்கள். அல்லது அதற்கு நேர்மாறாக நடக்கும். ஆனால் தற்போது FII மற்றும் DII இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் நெட் செல்லர்களாக மாறியுள்ளனர். இது மிகவும் அரிதான மற்றும் ஆபத்தான நிலை.
இதன் மூலம் சந்தையில் வலுவாக வாங்குபவர்கள் யாரும் இல்லை என்பதை உணர்த்துகிறது. விற்பனை அழுத்தம் அதிகரிப்பதால் சந்தை எதிர்பார்த்ததை விட வேகமாக வீழ்ச்சியடைகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்தியா தனது தேவையில் சுமார் 85 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. எனவே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவாகிறது, அரசின் நிதி நிலை பாதிக்கப்படுகிறது. ரூபாய் மதிப்பும் மேலும் வீழ்ச்சியடைகிறது.
இது ஒரு தொடர் பாதிப்பை ஏற்படுத்துகிறது அதாவது கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் ரூபாய் வீழ்ச்சி வாயிலாக பணவீக்கம் எதிரொலியாக பங்குச்சந்தை சந்தை வீழ்ச்சி என Chain Reaction ஆக பாதிப்பு ஏற்படுகிறது.
ஐடி பங்குகள் பெரும் வீழ்ச்சி
எச்.சி.எல் டெக் உள்ளிட்ட ஐடி நிறுவனப் பங்குகள் நேற்றைய ஒரே நாளில் 10 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளன. நிஃப்டி 50 போன்ற முக்கிய குறியீட்டில் உள்ள பெரிய நிறுவனப் பங்கு இவ்வளவு பெரிய வீழ்ச்சியை சந்திப்பது மிகவும் அரிது.
ஐடி பங்குகள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக காலாண்டு முடிவுகளில் ஏற்பட்டுள்ள வருவாய் சரிவு, உலக டெக் துறை மந்தநிலை அல்லது லாப வரம்பு அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்பட்டு உள்ளது. ஐடி பங்குகள் நிஃப்டியில் பெரும் பங்கு வகிப்பவை என்பதால் இத்துறையில் ஏற்படும் சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தியா பலவீனம்
பி.ஆர்.சுந்தரின் முக்கிய கவலை இதுதான். உலகப் பங்குச் சந்தைகள் பல All Time High-யில் இருக்கும் போது இந்திய சந்தை திடீரென பலவீனமடைந்து வருகிறது. இந்த ஒப்பீட்டு இந்திய பொருளாதாரம் பலவீனமான நிலையில் இருப்பதை காட்டுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் "அமெரிக்கா உள்ளிட்ட பிற சந்தைகள் வலுவாக இருக்கும் போது இந்தியாவில் ஏன் தொடர வேண்டும்?" என்று யோசிக்கத் தொடங்குகின்றனர். இது மேலும் FII வெளியேற்றத்தை தூண்டுகிறது. இதேவேளையில் தற்போது இந்திய முதலீட்டாளர்களுக்கும் வெளிநாட்டு சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ள காரணத்தால் உள்நாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாட்டில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் DII விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த 1-2 நாட்களில் என்ன நடந்தது?
இந்த எல்லா காரணிகளையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, கடந்த 1-2 நாட்களில் ஐடி பங்குகள் விழ்ச்சி, FIIக்கள் உலகளாவிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் ரூபாய் வீழ்ச்சி காரணமாக தீவிரமாக விற்கின்றனர். DIIக்கள் இந்த விற்பனையை போதுமான அளவு உள்வாங்கவில்லை. ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்தது. கச்சா எண்ணெய் விலையும் போர் பதற்றம் காரணமாக உயர்ந்தது மொத்த இந்திய சந்தையும் தற்போது பெரும் நெருக்கடியில் அமைந்துள்ளது.
ஏன் ஆபத்தான நிலை
ஒவ்வொரு காரணியும் தனித்தனியே சமாளிக்கக்கூடியதாக இருந்தாலும், அனைத்தும் ஒரே நேரத்தில் இணையும் போது பாதிப்பு அதிகமாக உள்ளது. பி.ஆர்.சுந்தர் சுட்டிக்காட்டிய இந்த நிலைமை இந்திய பங்குச் சந்தையில் குறுகிய கால ஆபத்து அதிகரித்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
-
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு செக் -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம்












Click it and Unblock the Notifications