புயல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த இயற்கை பேரழிவு எங்கே எப்போது ஏற்படும் என்பதை யாராலுமே கணிக்க முடியாது. இயற்கை பேரழிவுகளால் உயிரிழப்புக்கள் ஒரு பக்கம் என்றால் இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பும் மோசமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பலரும் தங்கள் வீடுகளையே இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் பொதுவாக வீட்டுக் காப்பீடு எனப்படும் ஹோம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நமக்கு ரொம்பவே நல்லது.

பெஞ்சல் புயல் வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த புயல் பலரது வீடுகளையும் கூட மிக மோசமாகப் பாதித்து இருக்கிறது.

business weather insurance

இதுபோன்ற சூழல்களில் அரசு இழப்பீடு தொகையைத் தரும் என்றாலும் அது சுத்தமாக பத்தாது. எனவே, இதுபோன்ற நேரங்களில் நமது வீட்டை காக்க நமக்கு ஹோம் இன்சூரன்ஸ் அதாவது வீட்டுக் காப்பீடு தான் மிகப் பெரியளவில் கை கொடுக்கும்.

ஹோம் இன்சூரன்ஸ்: நான் இருக்கும் ஏரியாவில் எல்லாம் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது என அசால்ட்டாக இருக்க வேண்டாம். இப்போதெல்லாம் யாருமே எதிர்பார்க்காத இடங்களில் தான் மழை வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், பல முறை வெள்ள பாதிப்பில் இருந்து தப்பினாலும் கூட, ஒரு முறை சிக்கினால் மொத்த சேமிப்பும் காலியாகிவிடும். எனவே, எல்லாம் போன பிறகு புலம்புவதை விட, இருக்கும் போதே ஹோம் இன்சூரன்ஸ் எடுப்பது சிறந்தது.

பெரும்பாலான ஹோம் இன்சூரன்ஸ்கள் சூறாவளி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புகளால் ஏற்படும் சேதங்களையும் கவர் செய்யும். வீட்டின் கட்டிடங்கள், உள்ளே இருக்கும் பொருட்கள் என இரண்டையும் இது கவர் செய்யும். நமக்கு ஏற்ற சரியான ஹோம் இன்சூரன்ஸை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்கலாம்.

கவனம்: நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் கட்டிடத்திற்கான இன்சூரன்ஸ் தேவைப்படாது. அதேபோல ஹவுசிங் சொசைட்டி அல்லது அப்பார்ட்மெண்ட்டில் சொந்த வீடு வைத்திருந்தாலும் கட்டிடத்திற்கான காப்பீடு தேவைப்படாது. ஏனென்றால், உங்கள் சொசைட்டி சார்பிலேயே அதற்கான இன்சூரன்ஸ் போடப்பட்டு இருக்கும். இருப்பினும், சொசைட்டி என்ன மாதிரியான இன்சூரன்ஸை போட்டுள்ளனர். புனரமைப்புச் செலவுகளை உள்ளடக்கிய இன்சூரன்ஸை எடுத்துள்ளனரா என்பதை நீங்களும் ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள்.

அதேபோல வீட்டில் இருக்கும் பொருட்களுக்கும் இன்சூரன்ஸ் கிடைக்கும். அதில் standard மற்றும் detailed என்று இரண்டு வகை இருக்கிறது. பெரும்பாலும் ப்ரிமியம் தொகை குறைவாக வர வேண்டும் எனப் பலரும் standard திட்டத்தை எடுப்பார்கள். ஆனால், detailed திட்டத்தை எடுத்தால் தான் வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் கவர் செய்ய முடியும் என்பதால் வல்லுநர்கள் அதை எடுக்கவே சொல்கிறார்கள்.

இது முக்கியம்: அதேபோல இதில் replacement cost மற்றும் depreciated value என இரண்டு வகை இருக்கிறது. அதில் replacement cost சிறந்தது என்கிறார்கள். அதாவது நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிவி வாங்கி இருக்கிறார்கள். அந்த டிவி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது என்றால் depreciated value எடுத்து இருந்தால் அதன் பயன்பாடு, தேய்மானம் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் குறைவான தொகையே உங்களுக்குக் கிடைக்கும். அதேநேரம் replacement costஐ எடுத்தால் டிவியை ரிப்பேர் செய்யும் தொகை அல்லது புதிய டிவி வாங்கும் தொகை முழுமையாக உங்களுக்குக் கிடைக்கும்.

பொதுவாக இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பு என்பதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்த க்ளெய்ம்களை விரைவாக க்ளியர் செய்வார்கள். எனவே இன்சூர் செய்த தொகையைப் பெறுவதில் பெரிய சிரமம் இருக்காது. வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரழிவு ஏற்படும் போது முதலில் claim intimationஐ இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அதை பிராசஸ் செய்து இன்சூரன்ஸ் தொகையை வழங்குவார்கள்.

யாருக்குக் கிடைக்காது: அதேநேரம் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம், முறைகேடாகக் கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சிலவற்றுக்கு ஹோம் இன்சூரன்ஸ் கிடைக்காது. எனவே, ஹோம் இன்சூரன்ஸ் எடுக்கும் முன்பு அனைத்து நிபந்தனைகளையும் தெளிவாகப் படித்துப் பார்த்துக் கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+