நாளைக்கே தங்கம் விலையில் பெரிய சம்பவம்.. டிரம்பால் அதிர போகுது தங்க மார்கெட்.. என்னவாகும்!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே குறைந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை வரும் நாட்களில் எப்படி இருக்கிறது.. அது எந்தளவுக்கு உயரும் என்பது தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை நாம் பார்க்கலாம்.!
கடந்த மாதம் இறுதியில் தங்கம் விலை சட்டென சரிந்தது. குறுகிய நாட்களில் தங்கம் விலை பெரியளவில் குறைந்திருந்தது. அப்பாடா 2026லாவது தங்கம் விலை குறையும் என்று மக்கள் கருதினர். ஆனால், அதற்கு நேர்மாறான விஷயமே நடந்தது. 20206க்குள் நாம் வந்தது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

தங்கம் விலை
2026ல் 11 நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே தங்கம் விலை குறைந்துள்ளது. மற்றபடி தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கம் இன்னும் எந்தளவுக்கு உயரும்.. இது இப்படி உயர என்ன காரணம் என்பது தெரியாமல்.. புரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்குச் சில முக்கிய காரணங்கள் இருக்கவே செய்கிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
டிசம்பர் மாதத்திற்கான அமெரிக்க வேலைவாய்ப்பு ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அங்கு வேளான் துறை சாராத வேலைகள் 50,000 அதிகரித்தன. இந்த முறை 60,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை எட்டவில்லை. அதேநேரம், இங்கு வேலையின்மை விகிதம் 4.5%ஆக இருக்கும் எனக் கணித்திருந்தனர். இருப்பினும், அது கனிப்பை விடக் குறைவாக 4.4%ஆகச் சரிந்தது.
பலவீனமான டாலர்
இது தொடர்பாக டிடி செக்யூரிட்டிஸின் கமாடிட்டி தலைவர் பார்ட் மெலக் கூறுகையில், "வேலைவாய்ப்புகள் பலவீனமாக உள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலைகள், நிச்சயமற்ற தன்மை ஆகியவை தங்கத்திற்குச் சாதகமான ஒரு சூழலையே உருவாக்கியுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
அதாவது அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் போதியளவில் இல்லை என்றால் அதை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும். இதுபோல வட்டி விகிதம் குறைக்கப்படும்போது டாலர் மதிப்பு சரிவதால் தங்கம் விலை அதிகரிக்கும். இப்போது வேலையின்மை சிறப்பாக இல்லாததால் இந்த மாதம் இறுதியில் நடக்கும் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்வு
இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் இரண்டு முறை அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தங்கம் விலை உயர்வதற்கான ஒரு சூழலையே உருவாக்கியுள்ளது.
இதுபோக உலகில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. ஈரான் போராட்டங்கள், ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் போர், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது, கிரீன்லாந்து குறித்து அமெரிக்காவின் கருத்துகள் எனப் புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. இதுவும் கூட தங்கம் விலை தாறுமாறாக உயரக் காரணமாக அமையலாம், 2026-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை $5,000-க்கு மேல் புதிய சாதனை உச்சங்களை எட்டக்கூடும் என மெட்டல்ஸ் ஃபோகஸ் கணித்துள்ளது.
நாளை என்னவாகும்
அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் ஜனவரி 27-28 தேதிகளில் நடைபெறும் சூழலில், அதுவரை தங்கம் விலை ஏறுமுகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச சந்தையில் சனிக்கிழமை இரவு ஏற்றத்துடனேயே தனது வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. ஸ்பாட் தங்கம் 34 டாலர் உயர்ந்து 4510 டாலருக்கு வர்த்தகமாகியது. இதே நிலை தொடர்ந்தால் நாளைய தினம் இந்தியாவிலும் தங்கம் விலை உயரவே செய்யும். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
-
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications