For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்குசந்தையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தபோகுது 2018 பட்ஜெட்?

By Gajalakshmi
Google Oneindia Tamil News

மும்பை: நிதிப்பற்றாக்குறை, முதலீடு குறைப்புத்திட்டம், நீண்டகால முதலீட்டின் மீதான வரி ஆகியவை குறித்து பட்ஜெட்டில் வெளியாகவுள்ள அறிவிப்பு பங்கு சந்தையில் மாற்றத்தை கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்தியள பட்ஜெட் 2018 பங்குசந்தையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது? என்ற கேள்வி பல்லாயிரக்கணக்கான பங்குசந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த காலத்தை ஒப்பீடு செய்தால், பட்ஜெட்டுக்குப்பிறகான மாதங்களில் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளன.

What will be the impact of Share market for union budget 2018?

2010 ஆம் ஆண்டில் பட்ஜெட் மாதத்திலிருந்து 6 முறை சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளதை காணமுடிகிறது. ஆனால், அதேசமயம், சென்செக்ஸ் புள்ளிகள் எட்டுமுறை வீழ்ச்சியடைந்துள்ளதையும் பார்த்துவருகிறோம்.

வரலாற்றை எடுத்துக்கொண்டால், பட்ஜெட் தாக்கலான உடனே எதிர்மறை தாக்கம்தான் சந்தையில் ஏற்பட்டதுண்டு. "சந்தை மாற்றங்கள், பங்குகளை வாங்குவது குறித்த முடிவுகளில் மாற்றம் ஆகியவை பங்குச்சந்தை சீரடைந்த பிறகே ஒரு நிலையான தன்மைக்கு வரும். எனவே சந்தையில் மாற்றம் உண்டாகும்" என்கிறார் எச்.டி.எப்.சி செக்யூரிட்டீஸ் பிரிவு தலைவர் தீபக் ஜாசனி.

பட்ஜெட்டுக்கு முன்பு பங்குசந்தை வீழ்ச்சியடைந்தால், பிறகு உச்சத்தைத்தொடும் என்பது நம்பகத்தகுந்த உண்மை. மோசமான ஆச்சர்யங்களையும் பங்குச் சந்தை பலருக்கு தந்திருக்கிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த முறை பங்குச்சந்தைமிக உச்சத்தை தொட்டு நீடிக்கிறது. எனவே இதைவிட உயர்வை சந்தை சந்திக்க வாய்ப்பு மிக குறைவு என்றுதான் சொல்லவேண்டும் என கணிக்கின்றனர் வல்லுநர்கள்.

பட்ஜெட் அன்று சந்தை முதலீட்டாளர்கள் எவ்வளவு தைரியமாக முதலீடு செய்ய முன்வருகிறார்கள் என்பதும் சந்தேகமே. ஏனென்றால் கடந்த 25 ஆண்டுகளாக பட்ஜெட் நாளன்று செய்யப்படும் முதலீடு குறைந்துகொண்டே வருகிறது என்பதை மோர்கன் ஸ்டேன்லி ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

விலைவாசி உயர்வும் சந்தையின் மாற்றத்திற்கு காரணமாக அமையும். 2018ம் ஆண்டில் கிடைக்கும் சம்பாத்தியத்துடன் வளர்ச்சிக்கான ஆதரவு, நீண்டகால லாபத்திற்கான முதலீடுகள், கச்சா எண்ணெய் விலை உயர்வால் அரசு சந்திக்கவுள்ள வளர்ச்சி தடை ஆகியவை இந்த ஆண்டு நிதிநிலையில் உள்ள பற்றாக்குறை, கடன்சுமை ஆகியவை ஏற்படுத்தும் தாக்கம் என்கிறது மோர்கன் ஸ்டேன்லி ஆய்வு.

English summary
What will be the impact of Share market for union budget 2018?, Experts predicts that the sharemarket will not go merely up as investors were in wait and watch mood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X