ரிவர்ஸ் கியர் போடும் தங்கம் விலை.. டிரம்ப் பாதிப்பு ரொம்ப மோசம்.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: கடந்த மாதத் தொடக்கத்தில் உச்சத்திற்குப் போன தங்கம் விலை, அதன் பிறகு மெல்லக் குறைந்தே வருகிறது. இதனால் மக்கள் குஷியில் உள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை குறைவதற்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தவுடன் தங்கம் விலை பறக்கத் தொடங்கிவிட்டது. அதன் பிறகு டிரம்ப் தினசரி ஒரு அறிவிப்பு, சீனாவுடனான வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தைப் பண்ணத் தங்கம் விலை புதிய உச்சத்திற்குப் பறந்தது. குறிப்பாகக் கடந்த ஏப்ரல் 22ம் தேதி வரலாறு காணாத வகையில் ஆபரணச் சவரன் தங்கம் ஒரு சவரன் ரூ.74,320க்கு போனது.

தங்கம் விலை
ஆனால், அதன் பிறகு பிரேக் பிடித்த தங்கம் விலை, சட்டென ரிவர்ஸ் கியர் போட்டது. தொடர்ந்து தங்கம் ரேட் குறைந்தே வருகிறது. நேற்றைய தினம் ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை இப்படி சட்டென குறைந்து வருவது பலருக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது. அதேநேரம் தங்கம் விலை எந்தளவுக்குக் குறையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான பதிலைப் பிரபலப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் வழங்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை ரூ.205 குறைந்து இருக்கிறது. இது வாங்க ஒரு நல்ல வாய்ப்பு... ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8755இல் இருக்கிறது. கோல்ட் பீஸில் கூட மக்கள் தங்கம் வாங்கும் ஆப்ஷன் இருக்கிறது. இப்போதைக்குக் குறையக் குறையத் தங்கம் வாங்குவதே பெஸ்ட். இப்போது குறைந்தாலும் அது ரிவர்ஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்கப் பொருளாதாரம்
முதலில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வந்துவிட்டது. ஆனால், அதெல்லாம் இல்லை என அங்குள்ளவர்கள் பூசி முழுகுகிறார்கள். ஆனாலும், டெக்னிக்கலாக பார்த்தால் நெகடிவ் வளர்ச்சி தான். பொருளாதார மந்தநிலை தான். ஏனென்றால் டிரம்ப்பிற்குப் பயந்து மார்ச் 31ம் தேதியே சீனாவில் இருந்து ஏகப்பட்ட சரக்குகளை இறக்கிவிட்டார்கள். எனவே, ஏற்றுமதியில் இறக்குமதியை மைனஸ் செய்யும் போது வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது.
இது ஜிடிபியில் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது. இதனால் ஜிடிபி நெகட்வில் தான் இருக்கிறது. ஆனால், இது இறக்குமதி திடீரென அதிகரித்ததால் ஏற்பட்டது. அடுத்த காலாண்டு சரியாகிவிடும் என அங்குள்ள சிலர் கூறிவருகிறார்கள். ஆனால், இது மட்டுமின்றி அமெரிக்காவில் மக்கள் செலவு செய்வதும் கூட கணிசமாகக் குறைந்துவிட்டது. இது ஒருபக்கம் இருக்கிறது.
என்ன நடக்கும்
அதேபோல மற்றொருபுறம் இப்போது அங்கே இறக்குமதி செய்தது காலியானவுடன் புதிய சரக்குகளை இறக்குமதி செய்ய வேண்டும். அப்போது விலைவாசி அதிகரிக்கும். டிரம்ப்பால் ஏற்பட்ட பாதிப்பு இதுதான். வரும் காலத்தில் இது இன்னும் மோசமாகும். மற்றொருபுறம் ரிசர்வ் வங்கியும் இந்திய ரூபாய் மதிப்பைப் பெரியளவில் குறைய விடாமல் தடுத்து வருகிறது. அதேநேரம் இதனால் இந்தியாவின் மருத்துவ மற்றும் ஐடி நிறுவனங்கள் பாதிக்கும். ஆனால், தங்கத்தில் நமது கணக்குச் சரியாகவே இருக்கிறது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications