அமெரிக்கா - ஈரான் மீட்டிங்: மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்..? பெரிய லிஸ்ட் இருக்கு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக தேர்வு செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை திட்டமிடப்பட்ட இந்த கூட்டம் நடைபெறுமா என்பதில் பெரும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இக்கூட்டத்திற்காக அமெரிக்க அதிகாரிகள் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் தலைமையில் இஸ்லாமாபாத்-க்கு வந்துள்ளனர். ஆனால் ஈரான் அதிகாரிகளும், தலைவர்களும் இன்னும் வரவில்லை.
இந்த வரலாற்று முக்கியமான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைமையில் நடப்பது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. இதேபோல் அமெரிக்கா பாகிஸ்தானை தேர்வு செய்ய என்ன காரணம்..?

உண்மையில் இதற்கு பின்னால் இரு தரப்புக்கும் சாதகமான பல அரசியல் காரணங்கள் உள்ளன. பாகிஸ்தான் தன்னைத் தானே மீண்டும் உலக அரங்கில் 'அமைதி தூதுவர்' என்று காட்டிக்கொள்ள விரும்பியது தான் முதலும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் தனிமை
கடந்த 15 மாதங்களில் அமெரிக்கா உலகின் பல பெரிய நாடுகளுடன் பல பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. வரி விதிப்பு, தலைவர்களை அவமானப்படுத்தும் பேச்சுகள் என பல நடவடிக்கைகள் மூலம் பல நாடுகளை எரிச்சலடைய வைத்தது.
எனவே இந்தப் போர் தொடங்கியபோது NATO, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா, போன்ற பெரிய நாடுகள் எதுவும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை. இந்த நிலையில் தனக்கு உதவ முன்வந்த ஒரே நாடு பாகிஸ்தான். மீடியேட்டராக இருந்தால், இந்த பேச்சு தோல்வியடைந்தால் பாகிஸ்தான் மீது பழி சுமத்தலாம் என்பதும் அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது.
ஏற்கனவே இதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது, லெபனான் தொடர்பான விஷயத்தை இஸ்ரேலுக்கு சரியான முறையில் பகிராதது குறித்து பிரச்சனைகள் வெடித்துள்ளது. இஸ்ரேல் பாகிஸ்தானை கடுமையாகவும் விமர்சனம் செய்துள்ளது.
ஈரானின் தேவை
ஈரான் தனது அண்டை நாடுகளைத் தாக்கிக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து போர் நடத்த முடியாத நிலையில் இருந்தது. ஆயுதங்களை மீண்டும் தயாரிக்கவும், எண்ணெய் விற்று பணம் சேகரிக்கவும் இடைவெளி தேவைப்பட்டது. எனவே அமெரிக்காவைப் போலவே ஈரானும் ஆர்வமாக முன்வந்த பாகிஸ்தானை மத்தியஸ்தராக ஏற்றுக்கொண்டது. இது இரு தரப்புக்கும் தற்காலிக ஓய்வு கொடுத்தது.
பாகிஸ்தானின் இரட்டை இலக்கு
பாகிஸ்தான் உலக அரங்கில் தாலிபானுக்கு வளர்த்து, ஒசாமா பின் லேடனுத்து அடைக்கலம் கொடுத்தது போன்ற பிரச்சனைகளால் மோசமான பெயரைப் பெற்றுள்ளது. பொருளாதார ரீதியாகவும், நற்பெயரிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்த அமைதிப் பேச்சு மூலம் தன்னை 'அமைதி நாடு' என்று மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பியது பாகிஸ்தான். மேலும் ஈரானுக்கு அருகில் இருப்பதால், அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டால் தானே பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் இந்த மீடியேட்டர் பணியில் மீகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியில் சாத்திக்கவும் செய்தது, இதற்கிடையில் நாளை பேச்சுவார்த்தை ரத்து ஆனாலோ அல்லது தோல்வியில் முடிந்தாலோ பாகிஸ்தானுக்கு இது பெரும் அவபெயராக மாறக்கூடும்.
பிற பெரிய நாடுகளின் நிலைப்பாடு
சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே ஈரானுடன் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் செய்துள்ளன. ஈரானுக்கு பல உதவிகளும் செய்து வருகின்றன. இதற்காக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதி பெற்றுள்ளன. எனவே இந்தப் போர் நிறுத்தம் ஏற்பட்டதில் சீனா, ரஷ்யாவும் பலன் அடைந்தனர்.
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து போர் நிரந்தரமாக முடிவுக்கு வந்தால் பாகிஸ்தான் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த வெற்றியை கொண்டாடும். இதோடு அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு கிடைக்கும்.
இந்த நட்பு நாளை பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி, பாதுகாப்பு உதவி என பல வகையில் நன்மை அடையவும் வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நடப்பாக இருக்க வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வருவதை டிரம்ப்-க்கு நோபல் பரிசு பரிந்துரைத்த நாளில் இருந்து உலகம் பார்த்து வருகிறது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications