பங்குச்சந்தையில் வெடிக்கக் காத்திருக்கும் 'ஏஐ' பபுள்? ZOHO ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி எச்சரிக்கை பின்னணி!
உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறையில் மிக முக்கியத் ஆளுமையாகவும், ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனராகவும் விளங்கும் ஸ்ரீதர் வேம்பு, சர்வதேசப் பங்குச்சந்தையின் தற்போதைய போக்கு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இன்றைய சூழலில் உலகின் முன்னணி 'பிக் டெக்' (Big Tech) எனப்படும் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள், அவை ஈட்டும் உண்மையான விற்பனை வருவாயை விட மிக மிக அதிக விலைக்கு வர்த்தகமாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அதீத விலை உயர்வு என்பது பங்குச்சந்தையில் ஒரு மிகப்பெரிய ஆபத்தான குமிழியை (Stock Market Bubble) உருவாக்கியிருக்கலாம் என்ற விவாதம் ஏற்கனவே உலகளவில் கிளப்பியிருக்கும் வேளையில் தற்போது ஸ்ரீதர் வேம்புவும் இதுக்குறித்து பேசியுள்ளார்.

பங்குச்சந்தையைத் தீர்மானிக்கும் பி/எஸ் (P/S Ratio) விகிதம் என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தின் உண்மையான நிதி பலத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள பங்குச்சந்தையில் 'ப்ரைஸ் டூ சேல்ஸ்' (Price-to-Sales) அல்லது பி/எஸ் விகிதம் என்ற கணக்கீடு பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு நிறுவனம் ஈட்டும் ஒரு ரூபாய் விற்பனை வருவாய்க்கு, முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் பங்கிற்கு எவ்வளவு ரூபாய் விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை இது குறிக்கும்.
உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தின் வருடாந்திர ஒட்டுமொத்த வருவாய் 100 பில்லியன் டாலராகவும், அதன் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலராகவும் இருந்தால், அதன் பி/எஸ் விகிதம் 10 ஆகக் கணக்கிடப்படும். இதன் பொருள், அந்த நிறுவனம் ஈட்டும் ஒவ்வொரு 1 டாலர் வருவாய்க்கு, முதலீட்டாளர்கள் 10 டாலர் வரை பெரும் தொகையைச் செலுத்தி அந்தப் பங்கை வாங்குகிறார்கள் என்பதாகும். தற்போதைய சூழலில் இந்த விகிதம் முன்னணி நிறுவனங்களிடம் மிக அபாயகரமாக உயர்ந்துள்ளது.
சர்வதேச ஜாம்பவான்கள்
ஸ்ரீதர் வேம்புவின் இந்த எச்சரிக்கைக்கு பின்னால் இருப்பது, உலகளாவிய டெக் நிறுவனங்களின் தற்போதைய பி/எஸ் விகிதத் தரவுகள் தான். இது பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் இத்துறை நிபுணர்களையும் திகைக்க வைத்துள்ளன. சர்வதேச அளவில் சிப் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் பங்குகள், அதன் 1 டாலர் விற்பனைக்கு 20 மடங்கு (20x) அதிக விலையில் வர்த்தகமாகி வருகின்றன.
இதேபோல மைக்ரான் (Micron) நிறுவனம் 19 மடங்கு (19x) என்ற உச்சத்திலும், கூகுள் (Google) நிறுவனம் 11 மடங்கு (11x) விலையிலும் வர்த்தகமாகின்றன. உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களான ஆப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 10 மடங்கு (10x) விலையிலும், மெட்டா (Meta) நிறுவனம் 7.5 மடங்கு (7.5x) விலையிலும் சந்தையில் விற்கப்படுகின்றன. இந்த எண்கள் அனைத்தும் தற்போதைய சந்தை எவ்வளவு விலையுயர்ந்த ஒன்றாக மாறியுள்ளது என்பதை காட்டுகின்றன.
ஏஐ (AI) மோகமும் 1999 டாட்-காம் பபுள்: ஒரு ஒப்பீடு
தற்போது பங்குச்சந்தையில் நிலவி வரும் இந்த அதீத விலை உயர்வுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மீது ஏற்பட்டுள்ள அதீத எதிர்பார்ப்புகளும், அது சார்ந்த முதலீடுகளுமே முக்கியக் காரணமாகும். குறிப்பாக என்விடியா போன்ற நிறுவனங்களின் பங்குகள், எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்திற்கான தேவை பல மடங்கு பெருகும் என்ற அதீத நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வளவு அதிக விலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால், தற்போதைய சூழல் கடந்த 1999-ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய 'டாட்-காம்' (Dot-com Bubble) பொருளாதாரக் குமிழியை விடப் பெரியது என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.
இருப்பினும், 1999 காலகட்டத்தில் இருந்த நிறுவனங்கள் எவ்வித உண்மையான லாபமோ, வருவாயோ இன்றி வெறும் ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே இயங்கின. ஆனால், இன்றைய பிக் டெக் நிறுவனங்கள் மாபெரும் பணப்புழக்கத்தையும், உண்மையான லாபத்தையும், சந்தையில் அசைக்க முடியாத ஆதிக்கத்தையும் கொண்டுள்ளன என்பதால் இதனை முழுமையாக 1999 உடன் ஒப்பிட முடியாது.
இறுதியில், முதலீட்டாளர்கள் எதிர்கால எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் மட்டுமே தற்போது மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து வருகிறார்கள் என்றும், அந்த எதிர்பார்ப்புகள் ஏதேனும் ஒரு புள்ளியில் நிறைவேறாமல் போனால், ஒட்டுமொத்த பங்குச்சந்தையும் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதே ஸ்ரீதர் வேம்புவின் இந்த எச்சரிக்கையாகும்.

ஸ்காட் மெக்நீலியின் வரலாற்றுப் பொன்மொழியும் அதன் நிதர்சனமும்
சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்காட் மெக்நீலி (Scott McNealy) 2002 இல் பங்குகள் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டதை விமர்சித்து இந்த புகழ்பெற்ற கருத்து ஓன்று உள்ளது. இது இந்தச் சூழலுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதன் வருவாயைப் விட 10 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கும்போது, அடுத்த 10 ஆண்டுகளில் அந்த முதலீட்டுப் பணம் திரும்பக் கிடைக்க வேண்டுமானால், அந்த நிறுவனம் தான் ஈட்டும் 100 சதவீத வருவாயையும் எவ்விதச் செலவும் இல்லாமல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு முதலீட்டாளர்களுக்கே திருப்பித் தர வேண்டும், இப்போது தான் போட்ட பண்ம திரும்ப கிடைக்கும். இல்லையெனில் நஷ்டம் தான்.
ஆனால், நிஜ உலகில் எந்தவொரு நிறுவனமும் தனது முதலீட்டாளர்களுக்கு மொத்த வருவாயும் லாபமாக கொடுக்க முடியாது.
காரணம் ஊழியர்களின் சம்பளம், வரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகள் (R&D), உற்பத்திச் செலவுகள் மற்றும் மார்கெட்டிங் எனப் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் செலவுகள் இருக்கும் என்பதால், வருவாய் முழுவதையும் லாபமாகத் தருவது என்பது நடைமுறையில் முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்றாகும். இல்லையெனில் அடுத்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் 10 மடங்கிற்கு அதிகமாக உயர வேண்டும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications