கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக்கூடாது: தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, இதில் எங்கே பொது நலன் இருக்கிறது? என்று பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியை கட்டாயப்படுத்தும் சர்குலர்
கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், "கொரோனா தடுப்பூசியை தனாக முன் வந்து செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில், தமிழகத்தில், கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப்படுத்துகிறது, இதுகுறித்தான சர்க்குலர்கள் அனுபப்பட்டுள்ளது. ஒரு சிலர் பாரம்பரிய மருத்துகளை விரும்புவார்கள். ஆகவே கட்டாயம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று வலியுறுத்த கூடாது என்று உத்தரவிடவேண்டும்" எனக்கோரி இருந்தது.
பொது நல வழக்கு அல்ல பொது நலனுக்கு எதிரான வழக்கு
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேவசலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, "இந்த வழக்கில் என்ன பொதுநலன் உள்ளது, இந்த மனு பொது நலனுக்கு எதிரானது. ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால், மாணவர்களின் நலன் கருதி தடுப்பூசி போட வேண்டும்" என்று சுட்டிக்காட்டியது.

வழக்கு தள்ளுபடி
தடுப்பூசியை இலவசமாக போடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும் மாணவர்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications