வீட்டுக்குள் இறங்கிய முகமூடி கொள்ளையர்கள்.. ஒற்றை ஆளாய் தடுத்து விரட்டிய பஞ்சாப் சிங்க பெண்
சண்டிகர்: உங்கள் வீட்டில் யாரும் இல்லை. நீங்கள் தனியாக இருக்கும்போது கொள்ளையர்கள் வந்தால் எப்படி இருக்கும். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வீட்டில் குழந்தைகளுடன் இருந்தபோது கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அவர்களை ஒற்றை ஆளாக தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றுள்ளார் அந்த சிங்கப் பெண்.
நாடு முழுவதும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தொழில் நுட்பங்கள் வளர்ந்தாலும், டிஸைன் டிஸைனாக யோசித்து கொள்ளை அடித்து கொண்டிருக்கின்றனர். வீடுகள், கோயில்கள், வாகனங்கள், வங்கிகள், ஏடிஎம், என்று பல கொள்ளைகள் உள்ளன. பொதுவாக கொள்ளையர்களே காவல்துறை துணிந்து பிடிப்பதே அரிதாகத்தான் நடக்கும்.

சமீபத்தில் கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து முன்று ஏடிஎம்களில் ஹரியானாவைச் சேர்ந்த கும்பல் கொள்ளையடித்தது. இந்த கும்பலை தமிழ்நாடு போலீஸ், சேஸிங், துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த சம்பவம் பாராட்டை பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலை எதிர்த்து, தனி ஒருத்தியாக பெண் துணிந்து போராடி கெத்து காட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம், அம்ரித்சர் பகுதியைச் சேர்ந்தவர் மந்தீப் கவுர். இவருக்கு ஜக்ஜீத் சிங் என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணவர் ஜக்ஜீத் சிங் வேலைக்கு சென்றிருந்த நிலையில், நேற்று மாலை மந்தீப் தன் இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மந்தீப் துணி வைத்துக் கொண்டிருந்தபோது, அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் அவர்களின் வீட்டை நோக்கி கொள்ளையடிக்க வந்துள்ளனர். சிசிடிவி கேமரா மூலம் மந்தீப் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கொள்ளையர்கள் தடுப்பு சுவர் ஏறி குதித்து, வாசல் கதவு அருகே வந்துள்ளனர். அவர்கள் கதவை உந்தித் தள்ளினார்கள். மந்தீப் தனி ஆளாக அவர்களுக்கு கடுமையான போட்டி கொடுத்து கதவை திறக்க முடியாமல் பார்த்துக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் மந்தீப் சத்தம் போட்டுக் கொண்டே கதவை அடைத்துவிட்டார். தொடர்ந்து அருகில் இருந்த சோபாவை இழுத்து கதவுடன் சேர்த்து வைத்தார். இதனால் கொள்ளையர்களால் கதவை திறக்க முடியவில்லை. இருப்பினும் கொள்ளையர்கள் அங்கும், இங்கும் சுற்றி வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனர்.
கொள்ளையர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிட்டுக் கொண்டே, மந்தீப் அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினார். செல்போனிலும் சிலரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். இந்த சிசிடிவி காட்சியில் மந்தீப்பின் மகன், மகள் ஆகியோரும் பதவாகியுள்ளனர்.
கொள்ளையர்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. இதனால் அவர்கள் ஒருகட்டத்தில் சோர்வடைந்து அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன்பிறகு தான் மந்தீப்பும், அவரின் குழந்தைகளும் நிம்மதியடைந்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொள்ளையர்களை ஒற்றை ஆளாக, துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய மந்தீப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மந்தீப் கணவர் ஜக்ஜீத் சிங் தங்கநகை வியாபாரி. அதன் காரணமாக கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மந்தீப் கூறுகையில், "கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என் குழந்தைகள் மிகவும் பயந்துள்ளனர். கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications