இனிமேல் எங்களை உரசினால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை
சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் அங்குப் பாதுகாப்புப் படை வீரர்களிடையே உரையாற்றினார். இனி மேல் எல்லை மீறினால் பதிலடி வலிமையாக இருக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இந்த வெற்றியை எல்லையைப் பாதுகாக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரில் பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளம் மிக முக்கிய பங்கு வகித்தது. இன்று திடீரென அந்த முகாமிற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குப் பாதுகாப்புப் படை வீரர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, நமது விமானப்படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது என்றும் பாக். இதயத்தை நாம் எப்போது துளைத்துத் தாக்கினோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், விமானப்படை மற்றும் ராணுவப்படைக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பாக இருந்தது என்ற அவர், நமது அதிநவீன தொழில்நுட்பத்தோடு பாகிஸ்தானால் போட்டிப்போட முடியாது என்றும் நம்மிடம் உலகின் தலைசிறந்த தொழில்நுட்பம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே நமது விமானப்படைத் தளத்தைத் தாக்கும் அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை என்ற அவர் எல்லையைப் பாதுகாக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும், எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு நமக்கு வலிமையான பாதுகாப்பை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் இனியும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் பதிலடி கடுமையாக இருக்கும் என்ற அவர், பாகிஸ்தான் தீவிரவாத முகாம், விமானத் தளங்கள் மட்டுமின்றி, அவர்களின் தீய நோக்கத்தையும் தகர்த்தீர்கள் என்றும் தெரிவித்தார். நமது லட்சுமண ரேகை என்பது பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், இன்னொரு முறை பாகிஸ்தான் நம்மை உரசிப் பார்த்தால் தாக்கினால் சரியான பதிலடி தருவோம் என்று தெரிவித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications