நெல்லை, தென்காசி உள்பட 10 மாவட்டங்கள்.. வெளுக்க போகும் கனமழை.. சென்னைக்கும் அலர்ட்! வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய ஆரம்பத்தில் குறைவான மழையே பெய்தது. ஆனால் ஒரு வாரத்திற்கு பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யத்தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம் மற்றும் காரைக்காலில் இன்றும் மழை தொடரும். தமிழகத்தை பொறுத்தவரை டெல்டா உட்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
10 மாவட்டங்களில் மழை: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் மழை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேபோல் இன்று சென்னையை பொறுத்தவரை இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
1.தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 15-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். 2. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, (10.11.2023) அதாவது இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை எப்படி?: நாளை (11.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.11.2023 மற்றும் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.11.2023 மற்றும் 16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை -31-32 ஆக இருக்கக்கூடும். குறைந்தபட்சமான செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications