தாத்தா வயசு.. ஏரியாவுக்கே தாதாவாம்.. 13 வயசு சிறுமியிடம்.. ஒரே கடி.. அலறி துடித்த காமுகன்!
சண்டிகர்: மார்க்கெட்டுக்கு போன பெண்ணை, நடுரோட்டிலேயே தரதரவென இழுத்து கொண்டு போய் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் ஒரு தாத்தா.. அந்த தாத்தா ஏரியா ரவுடியாம்!
பஞ்சாபின் லூதியானாவில் சக் கலான் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.. 13 வயசாகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய அம்மாவுடன் இவர் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார்... கடையில் எல்லாம் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது 50 வயசு தாத்தா, சிறுமியை பார்த்துவிட்டார்.. பார்த்ததும் காம வெறி மண்டைக்கு ஏறிவிட்டது.. அந்த தாத்தா பெயர் ஆல்பல் சிங்.. அவர் அந்த ஏரியா ரவுடி என்கிறார்கள்.
திடீரென நடுரோட்டிலேயே சிறுமியின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றார்.. இதை ரோட்டில் இருந்த அனைவருமே பார்த்து அதிர்ச்சி ஆனார்கள்.. இதை பார்ப்பதற்கு சினிமாவில் வருவதை போலவே இருந்தது.
சிறுமியை இழுத்து சென்ற தாத்தா, ஒரு ரூமில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.. வெறி பிடித்து அலைந்த அந்த தாத்தாவின் கையை சிறுமி, பலமாக கடித்துவிட்டார்.. அந்த வலி தாங்காமல் ரவுடி தாத்தா அலறினார்.. அவர் ஆவென அலறியபோது, கீழே கிடந்த ஒரு துணியை எடுத்து ரவுடி வாயிலேயே திணித்துவிட்டு, அவரிடமிருந்து தப்பி ஓடிவந்து விட்டார்.
இதனிடையே சிறுமியை இழுத்து கொண்டு போவதை பார்த்த அவரது அம்மாவும், பொதுமக்களும் விரட்டி வந்துவிட்டனர்.. மொத்தமாக கூடி, ரவுடி தாத்தாவை துவைத்து எடுத்தனர்.. அதற்குள் தகவலறிந்து போலீசாரும் வந்துவிட்டனர்.. பொதுமக்களிடமிருந்து ரவுடி தாத்தாவை மீட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, மீட்கப்பட்ட சிறுமியை மெடிக்கல் செக்கப் செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி இப்போது நன்றாக இருக்கிறாராம்.. பட்டப்பகலில் மார்க்கெட் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அங்கு ஏற்படுத்தியது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications