சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிக்ஸர் அடித்த கெஜ்ரிவால்.. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு.. மக்களுக்கு செம ட்விஸ்ட்.. விழிக்கும் பாஜக

முதல்வர் வேட்பாளர் யார் என்று பஞ்சாபில் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநில ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.. ஆனால், அங்குதான் அம்மக்களுக்கு ஒரு ட்விட்ஸ்ட்டும் வைத்துள்ளார்...!

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.. இதில், பஞ்சாப் மாநிலத்தில், ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.. 5 மாநிலங்களில், 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது..

கிடைத்தது 4 வாரம் ஜாமீன்.. சிறையிலிருந்து ரிலீசாகிறார் ராஜேந்திர பாலாஜி.. உச்சநீதிமன்றம் உத்தரவு கிடைத்தது 4 வாரம் ஜாமீன்.. சிறையிலிருந்து ரிலீசாகிறார் ராஜேந்திர பாலாஜி.. உச்சநீதிமன்றம் உத்தரவு

அதனால், பஞ்சாபை கைப்பற்ற பாஜக மும்முரமாகி வருகிறது.. பஞ்சாப்பையும் விட்டுவிடக்கூடாது என்று காங்கிரஸ் போராடி வருகிறது.. இதற்கு நடுவில்தான் உள்ளே புகுந்து இரு பெரும் கட்சிகளை கலங்க வைத்து வருகிறது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி..!

தொகுதிகள்

தொகுதிகள்

பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.. கடந்த சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 117 இடங்களில், 77 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது... பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது... ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியோ, 20 தொகுதிகளை வென்று 2 பெரிய கட்சியாக உருவெடுத்ததை பாஜகவே வியந்து பார்த்தது.

 ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

இந்த முறை தேர்தலில், சண்டிகரை ஆம் ஆத்மி கட்சி நிறையவே நம்பி உள்ளது.. இதுவரை காங்கிரஸ், பாஜக என்று மாறி மாறி ஆட்சி செலுத்தியபோதும், நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 14 இடங்களைக் கைப்பற்றியது.. மேயர் தேர்தலில் தோல்வியை தழுவினாலும், சண்டிகரில் விழுந்த வாக்குகளை அப்படியே தக்க வைத்து கொள்ள ஆம் ஆத்மி பலவிதமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.. அதற்கேற்றபடி, தேர்தலுக்கு முந்தைய வெளியாகி வரும் ஏராளமான கருத்துக்கணிப்புகளும் ஆம் ஆத்மிக்கு சாதகமாகவே இருந்து வருவது மக்களின் கவனத்தை அதிகப்படுத்தி உள்ளது.

பேட்டி

பேட்டி

செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் பக்வந்த் மன், மாநில பொறுப்பாளர் ராகவ் சதா ஆகியோர் "ஜனதா சுனேகி ஆப்னா சி.எம்" என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்..,. அதன்படி, 70748 70748 என்ற போன் நம்பரை மக்கள் அழைத்து, தங்களுக்கு பிடித்தமான முதல்வர் வேட்பாளரை முன்மொழியலாம்... ஜனவரி 17ம் தேதி மாலை வரை இந்த போன் வசதி இருக்கும்.. அதற்குள் உங்களுக்கு விருப்பமான முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்லலாம்..

 ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

எத்தனையோ கட்சிகளில் தங்களது சொந்தக்காரர்களை முதல்வர் வேட்பாளர்களாக நியமிக்கிறார்கள்.. ஆனால் நாங்கள் அப்படி இல்லை.. பக்வத் மன் நமக்கு நெருக்கமானவர்.. என்னுடைய தம்பி மாதிரி.. கட்சியில் செல்வாக்கு பெற்றவர்... அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்தோம்... ஆனால், அவர்தான் மக்களே அதை தீர்மானிக்கும் என்று சொல்லிவிட்டார்.. அவர் ஆசைப்பட்டதால்தான், இப்படி போன் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளோம்..

 தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

ஏன் என்றால், இங்கே இருக்கிற 3 கோடி பஞ்சாபிகளும் எனக்கு ரொம்ப முக்கியம்" என்றார்.. ஏற்கனவே பாஜகவுக்கு எரிச்சலை கூட்டும் விதத்தில், பல்வேறு வித்தியாசமான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுதான் அம்மாநில மக்களின் கவனத்தை ஆம் ஆத்மி ஈர்த்து வைத்துள்ளது.. இப்போது யாருமே செய்யாத வகையில், முதல்வர் வேட்பாளர் தேர்வையும் படுவித்தியாசமாக செய்துள்ளது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டு வருகிறது..!

English summary
AAP Punjab CM face to be chosen by public voting on SMS, says Arvind Kejriwal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X