பாத்ரூமில் படமெடுத்த கேமரா.. அலறிய பெண்ணால் அம்பலமான ரகசியம்.. காதலனோடு சிக்கிய காதலி.. ஷாக்
சண்டிகர்: காதலன் கூறியதை தொடர்ந்து காதலியே தன்னுடன் தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களை ரகசியமாக ஆபாசமாக வீடியோ எடுக்க கழிவறையில் கேமரா பொருத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் எல்லையில் சண்டிகர் அமைந்துள்ளது. இந்த நகரம் இருமாநிலங்களின் தலைநகராக உள்ளது. சண்டிகர் 22வது செக்டார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குடிமாடி தங்கும் விடுதி உள்ளது.

இந்த பிஜியில் பெண்கள் தங்கி வருகின்றனர். இங்கு வசித்து வரும் இளம்பெண்ணுக்கும், 20வது செக்டார் பகுதியில் வசித்து வரும் இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் என்பது காதலாக மாறியது.
இந்நிலையில் தான் காதலனுக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியுள்ளது. அதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். அதாவது பிஜியில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ, போட்டோ எடுக்க வேண்டும் என காதலன் தனது காதலியிடம் கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் காதலன் கூறியதை காதலி அப்படியே ஏற்று கொண்டுள்ளார்.
அதன்பிறகு காதலன் கூறிய அறிவுரையின்படி பிஜி தங்கும் விடுதியின் கழிவறையில் உள்ள கீசரின் மேல்புறம் ரகசிய கேமராவை காதலி பொருத்தியுள்ளார். இந்நிலையில் தான் அங்கு அவரது தோழி சென்றுள்ளார். அப்போது கீசரின் மேற்புறம் இருந்து திடீரென லைட் எரிந்ததை அவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அவர் தனது சக தோழிகள் மற்றும் விடுதி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கீசரின் மேல்புறத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த வேளையில் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அதோடு காதலன் கூறியதால் தான் அவர் கேமரா பொருத்தியதாக தெரிவித்த நிலையில் அவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைதான காதல் ஜோடியிடம் இருந்து 2 செல்போன்கள், ரகசிய கேமரா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சண்டிகர் செக்டார் 22 போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications