‛டார்க்கெட் மத்திய அரசு’.. மீண்டும் டெல்லி கிளம்பும் விவசாயிகள்! ஹரியானாவில் 3 நாள் ‛இன்டர்நெட் கட்’
சண்டிகர்: மத்திய அரசுக்கு எதிராக வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது. டெல்லி நோக்கி அவர்கள் புறப்படும் நிலையில் நாளை முதல் 13ம் தேதி வரை 7 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை ரத்து செய்து ஹரியானா பாஜக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஹரியானாவில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் இருக்கிறார். இந்த மாநிலத்தில் ஏராளமான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாய சங்கங்கள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் தான் மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இன்னும் செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் தான் அனைத்து பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சார், கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்பட 200 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இவர்கள் டெல்லியில் மிகப்பெரிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தை பிப்ரவரி 13ம் தேதி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் நாளை முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்ல உள்ளனர். இத்தகைய சூழலில் தான் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதாவது நாளை முதல் வரும் 13ம் தேதி வரை ஹரியானாவில் 7 மாநிலங்களில் இன்டர்நெட் சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிண்ட், ஹிசார், பாதிகாரபாத், சிர்சா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை நாளை முதல் 3 நாட்கள் துண்டிக்கப்பட உள்ளது.
அதன்படி ஒரே நேரத்தில் அதிகமானவர்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி, இண்டர்நெட் வசதி என்பது துண்டிக்கப்பட உள்ளது. செல்போன்களில் மட்டும் பேசி கொள்ள முடியும். இந்த இன்டர்நெட் சேவை ரத்து தொடர்பான உத்தரவு என்பது நாளை காலை 6 மணி முதல் பிப்ரவரி மாதம் 13ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹரியானாவில் பல இடங்களில் விவசாயிகளின் ஊர்வலத்தை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைத்துள்ளனர். இதுதவிர விவசாயிகளின் இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் பாதைகளில் விரிவான கண்காணிப்பு பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications